இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது மாயை - டி. ராஜேந்தர்
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் சரித்திர சாதனை படைத்துள்ளதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னை: இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது மாயை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். துரோகம் என்றுமே வெற்றி பெறாது என்பதை ஆர்.கே.நகர் தேர்தல் உணர்த்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஆரம்பம் முதலே டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், டிடிவி தினகரன் சரித்திர சாதனை படைத்துள்ளதாக எடுத்துக்கொள்ள முடியாது. சரியான தலைமை இல்லாததால் தமிழகத்தில் யார் யாரோ அரசியல் களத்திற்கு வருகிறார்கள் என்று கூறினார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கலாம். ஆனால், ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அது சாத்தியம் ஆகாது. இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது மாயை. துரோகம் என்றுமே வெற்றி பெறாது என்பதை ஆர்.கே.நகர் தேர்தல் உணர்த்துகிறது என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications