எவன் வந்தாலும் கை, கால்களை வெட்டி விடுவேன்.. பெண் வட்டாட்சியரை பகிரங்கமாக மிரட்டிய விசிக மா.செ.!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் அருகே ஆ வாசுதேவ நல்லூரில் அனுமதி இன்றி விசிகவினர் கொடி கம்பம் நட்டுள்ளனர். அதனை அகற்றுமாறு வட்டாட்சியர் இந்திரா உத்தரவிட்டுள்ளார். அப்போது பெண் வட்டாட்சியரை விசிக மாவட்ட செயலாளர் பகிரங்கமாக மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஆ வாசுதேவ நல்லூரில் அனுமதியின்றி விசிகவினர் கொடிகம்பம் நட்டிருக்கிறார்கள் அதனை அகற்றுமாறு வட்டாட்சியர் இந்திரா உத்தரவிட்டிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த விசிக மாவட்டச் செயலாளர் தனபால், மேஜிஸ்திரேட் என்றால் என்ன, நீ பேசுறதுக்கு ஆள் கிடையாது, வெளியே போ... என்று ஒருமையிலும், எவன் வந்தாலும் கை, கால்களை வெட்டி விடுவேன் , உனக்கு ஏன் மரியாதை கொடுக்கனும், என்று கூறி தகாத வார்த்தைகளாலும் திட்டியிருக்கிறார்.
போலீசார் பக்கத்தில் இருக்கும் போதே பெண் வட்டாட்சியரை விசிக மாவட்டச் செயலாளர் தனபால் பகிரங்கமாக மிரட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை அப்பகுதியினர் வைத்துள்ளனர்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது காவலர்களை இழிவாக விமர்சித்ததாக அந்த மாவட்ட செயலாளர் மீது சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக வீடியோ வெளியான நிலையில், அவரை இடை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அப்போது உத்தரவிட்டார்,.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications