சீக்கிரம் புருஷன் கதையை முடியுங்கள்.. கள்ளக்காதலனை நச்சரித்துக் கொலை செய்ய வைத்த வித்யா!
சென்னை: தனது கணவர் தொடர்ந்து நமது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கிறார். அவரை சீக்கிரம் கொலை செய்ய வேண்டும். சீக்கிரமாக இதைச் செய் என்று தனது கள்ளக்காதலனை தொடர்ந்து நச்சரித்து நச்சரித்து கொலை செய்ய வைத்துள்ளார் சென்னையை நடுநடுங்க வைத்துள்ள வித்யா.
காமம் கண்ணை மறைக்க கட்டிய கணவர் என்று கூட பாராமல் கூலிப்படையை வைத்துக் கொன்று தீர்த்த இந்தப் பெண்ணை அத்தனை பேரும் அப்படி வாயார தூற்றி வருகின்றனர். ஒட்டு மொத்த பெண்களின் சாபத்தையும் இந்தப் பெண் பெற்றிருக்கிறார்.
நெஞ்சத்தைப் பதை பதைக்க வைக்கும் இந்தக் கொலை தொடர்பாக சிக்கிய கூலிப்படையைச் சேர்ந்த பெருமாள் என்பவர் அதிர்ச்சிகரமான தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளான்.

கள்ளக்காதலன் மணிகண்டன்
கூலிப்படை தலைவனான துரையும் நானும் நண்பர்கள். செய்யாரை சேர்ந்த மணி கண்டன் துரையின் நண்பர் ஆவார். இதனாலும் மணி கண்டனுடனும் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. மூன்று பேரும் அடிக்கடி சந்தித்து பேசுவோம்.

வித்யா - ராஜ்குமார்
அப்போது சென்னை கிருஷ்ணாநகரில் வசித்து வரும் வித்யா என்ற பெண்ணை காஞ்சீபுரத்தை சேர்ந்த ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்துள்ளார். வித்யா வளசரவாக்கத்தில் ஒரு மளிகை கடையில் வேலை செய்தார். அவர் பஸ் ஏற செல்லும் போது மணிகண்டனின் தாயாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தால் வித்யா காஞ்சீபுரம் செல்லும் போது மணிகண்டனின் தாயார் வீட்டுக்கு செல்வார். அப்போது மணிகண்டனுடன் வித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அடிக்கடி உல்லாசம்
நாளடைவில் அவர்களுக்குள் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்கள். இந்த சம்பவம் ராஜ்குமாருக்கு தெரிய வந்ததும் கண்டித்துள்ளார்.

தீர்த்துக்கட்டி விடு மணிகண்டா
தங்கள் கள்ளத்தொடர்புக்கு கணவர் இடையூறாக இருந்ததால் அவரை தீர்த்து கட்டி விடலாம் என்று மணிகண்டனிடம் கூறி இருக்கிறார். மணிகண்டன் எங்களிடம் வந்து விசயத்தை சொன்னார். ராஜ்குமாரை தீர்த்து கட்டினால் பணம் வாங்கி தருவதாகவும் கூறினார்.

நண்பனுக்காக கொலை செய்ய சம்மதம்
நண்பனுக்காக நாங்களும் கொலை செய்ய சம்மதம் தெரிவித்தோம். எங்கள் திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் கூடி ஆலோசித்தோம். 3 வாரங்களுக்கு முன்பே போட்டு தள்ள திட்டம் தீட்டினோம். ஆனால் அப்போது ராஜ்குமார் சபரிமலை செல்ல மாலை அணிந்து விரதம் இருந்தார்.

கொல் கொல் என்று நச்சரித்தார்
அந்த நேரத்தில் அவர் மது குடிப்பதில்லை. இதனால் அவரை போட்டு தள்ளும் திட்டம் தள்ளிப்போனது. ஆனால் வித்யா அடிக்கடி மணிகண்டனை தொடர்பு கொண்டு சீக்கிரம் கதையை முடியுங்கள் என்று நச்சரித்து வந்தார்.

போட்டோவும் கைச்செலவுக்குப் பணமும் கொடுத்த வித்யா
கடந்த 20-ந்தேதி ராஜ்குமாரை கொலை செய்வதற்காக அனைவரும் ஒன்று கூடி மாங்காட்டில் ஒரு கம்பெனியில் சரவணனுடன் தங்கி இருந்தோம். மாலை 5 மணியளவில் வித்யா ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் எங்களுக்காக காத்து இருந்தார். நாங்கள் அங்கு சென்று அவரை சந்தித்தோம். அப்போது கணவர் ராஜ்குமாரின் போட்டோவை அடையாளத்துக்காக எங்களிடம் தந்தார். மேலும் செலவுக்கு ரூ.5 ஆயிரமும் தந்தார். இரவில் வேலை முடிந்து கணவர் பைக்கில் வரும் வழியையும் தெரிவித்தார்.

1 மணிக்கு மேல் வரச் சொன்னார்
நாங்களும் பைக்கில் செல்லும் போதே போட்டு தள்ளிவிடலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் அவர் வேகமாக சென்றதால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இரவு 10 மணிக்கு வித்யாவை தொடர்பு கொண்டு இப்போது வரவா? என்று கேட்டோம். கீழ் வீடுகளில் ஆட்கள் இன்னும் தூங்கவில்லை. எனவே இப்போது வர வேண்டாம் என்றார். நள்ளிரவு 1 மணியளவில் வித்யா எங்களை செல்போனில் தொடர்பு கொண்டு இப்போது வரலாம் என்றார்.

கதவைத் திறந்து விட்ட வித்யா
நாங்கள் புறப்பட்டு வித்யா வீட்டுக்கு சென்றதும் அவர் நைசாக கதவை திறந்து வெளியே வந்து ராஜ்குமார் போதையில் நன்றாக தூங்குவதாக கூறினார். உடனே நாங்கள் உள்ளே சென்றோம். செந்தில், சரவணன், கிரிதரன் மூவரும் கையுறை போட்டு கொண்டனர். வித்யா படுக்கையறையில் இருந்து தலையணையை எடுத்து வந்தார்.

கால்களை கெட்டியாகப் பிடித்த வித்யா
2 பேர் தலையணையால் ராஜ்குமாரின் முகத்தை அமுக்கினார்கள். 2 பேர் அவரது வயிற்றின் மீது ஏறி அமர்ந்து கொண்டு கத்தியால் கழுத்தை அறுத்தனர். கழுத்து அறுபட்டதும் துடித்த ராஜ்குமாரின் கால்களை வித்யா கெட்டியாக பிடித்து கொண்டார். காய்கறி நறுக்கும் கத்தியால் அறுத்ததால் கத்தி வளைந்து விட்டது. எனவே உயிர் போகவில்லை. உடனே வீட்டில் இருந்து செலோடேப்பை வித்யா எடுத்து வந்தார். அதை ராஜ்குமார் வாயில் ஒட்டினோம். பின்னர் கத்தியில் அறுத்தோம். சிறிது நேரத்தில் கழுத்து அறுந்து அவர் செத்து விட்டார்.

12 பவுன் நகைகளைக் கொடுத்தார்
உடனே கணவரின் கழுத்தில் கிடந்த செயின், கையில் கிடந்த மோதிரத்தை வித்யா கழட்டி எடுத்து எங்களிடம் தந்தார். எங்களுக்கு கூலியாக ரூ.2 லட்சம் தருவதாக பேசியிருந்தார். அவ்வளவு பணம் இல்லாததால் 12 பவுன் நகைகளை தந்தார். நாங்கள் அதை வாங்கி கொண்டு பைக்கில் தப்பி சென்றோம். வழியில் எதிர்பாராத விதமாக போலீஸ் கையில் சிக்கி கொண்டோம் என்று கூறியுள்ளான் பெருமாள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications