அனுமதியின்றி பேனர் வைத்து அபராதம் கட்டிய விஜய் ரசிகர்கள்!
புதுச்சேரி: விஜய் பிறந்தநாளுக்கு அனுமதியின்றி பேனர் வைத்து அவரது ரசிகர்கள் அபராதம் கட்டிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் சமீபத்தில் தன்னுடைய 42 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.அவரது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் பலரும் அன்னதானம், ரத்த தானம், நலத்திட்ட உதவிகள் பலவற்றையும் ஏற்பாடு செய்தனர்.

மேலும் விஜய்யின் விதவிதமான பேனர்களையும் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் வைத்திருந்தனர். தமிழ்நாடு தாண்டி கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற இடங்களிலும் விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகாலமாகக் கொண்டாடினர்.
இந்நிலையில் புதுச்சேரி பகுதியில் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களை காவல்துறை அகற்றியுள்ளது. மேலும் காவல்துறை அனுமதியின்றி இந்த பேனர்களை வைத்ததற்காக ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினையும் அபராதமாகக் கட்டியுள்ளனர்.

புதுச்சேரி காவல்துறையின் இந்த நடவடிக்கை ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் பொதுமக்கள் பலரும் காவல்துறையின் இந்த செயலைப் பாராட்டி வருகின்றனர்.
காவல்துறையின் இந்த செயலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போதைய புதுச்சேரி ஆளுநருமான கிரண்பேடியும் தனது பங்கிற்கு பாராட்டியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications