விஜய் ரசிகர்கள் சூப்பர்!
விஜய் ரசிகர்களின் டிவிட்டர் பக்கம் ஒன்று, ஜல்லிக்கட்டு புரட்சியைக் கெளரவப்படுத்தும் வகையில் 6 நாட்களுக்கு பைரவா படம் குறித்த செய்திகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்ததாம்.
சென்னை: விஜய் ரசிகர்களை இந்த விஷயத்திற்காக பாராட்டியாக வேண்டும். ஜல்லிக்கட்டு புரட்சி தமிழகத்தை வியாபித்திருந்த நிலையில் போராட்டம் நடந்த நாட்களில் விஜய் நடித்த பைரவா படத்தின் அப்டேட்களைப் போடாமல் போராட்டத்திற்கு வலு சேர்த்துள்ளதாக விஜய் ரசிகர்கள் மன்ற டிவிட்டர் பக்கம் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
We had stopped our #Bairavaa updates for the past 6days as a mark of respect and support to the protests related to #Jallikattu
— Bairavaa Fan Page (@Bairavaa) January 23, 2017
~@Bairavaa
பைரவா பேன் பேஜ் என்ற பெயரில் உள்ள அந்த டிவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக பைரவா படம் குறித்த செய்திகளை கடந்த 6 நாட்களாக நாங்கள் போடவில்லை. போராட்டங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருந்தோம் என்று பெருமை பொங்க தெரிவித்துள்ளனர்.

அந்தப் பக்கத்தில் கடைசியாக ஜனவரி 17ம் தேதி அப்டேட் போட்டுள்ளனர். அதுஜல்லிக்கட்டு புரட்சிக்கு விஜய் அளித்த ஆதரவு வீடியோ. அதன் பிறகு 20 மணி நேரத்திற்கு முன்புதான் அப்டேட்டுகளை ஆரம்பித்துள்ளனர்.
விஜய்யே கூட சென்னை மெரீனாவில் நடந்த போராட்டத்திற்கு இரவில் வந்து தனது உணர்வை பதிவு செய்து விட்டுச் சென்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த பக்கம் மட்டுமல்லாமல் மேலும் பல விஜய் ரசிகர்களின் பக்கங்களிலும் கூட ஜல்லிக்கட்டு ஆதரவு வாசகங்களை அதிகம் காண முடிந்தது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல பல்வேறு நடிகர்களின் ரசிகர்களும் கூட ஜல்லிக்கட்டு புரட்சி நடந்த காலகட்டத்தில் அதுதொடர்பான உணர்வுகளுக்கும், செய்திகளுக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து முதலில் தாங்கள் தமிழர்கள், தமிழ்நாட்டவர்கள் என்பதை நிரூபித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications