முதல் முறையாக வைகோவுக்கு பிரசாரம் செய்யப் போகும் விஜயகாந்த்!
நெல்லை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏப்ரல் 2ம் தேதி முதல் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வைகோவை ஆதரித்து மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

தேமுதிக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 14 ந்தேதி முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதை தொடர்ந்து 2 ம் கட்டமாக தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகளிலும் விஜயகாந்த் ஏப்ரல் 2ம் தேதி முதல் இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதற்காக நாளை விஜயகாந்த் நெல்லை வருகிறார். நெல்லை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளத்தில் ஏப்ரல் 2ம் தேதி மாலை 4 மணிக்கு அவர் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்கிறார்.பின்னர் 6 மணிக்கு நாங்குநேரியிலும், 8 மணிக்கு பாளை மார்க்கெட் திடலிலும் தேமுதிக வேட்பாளர் சிவனணைந்தபெருமாளுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
தொடர்ந்து தென்காசி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் சதன்திருமலை குமாரை ஆதரித்து சங்கரன் கோவிலில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்கிறார்.
அதனை தொடர்ந்து விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் விஜயகாந்த் பிரச்சாரம் செய்கிறார்.
விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 இடங்களில் ஒரே வேனில் இருந்தபடி வைகோவை ஆதரித்து விஜயகாந்த் பேசுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications