மக்களுக்காக கொடநாடு எஸ்டேட்டை ஜெயலலிதா தருவாரா ? விஜயகாந்த் கேள்வி
குன்னூர்: மக்களுக்காகவே நான் என கூறும் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டை மக்களுக்கு தர தயாரா? என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றனர்.

அதன்படி, மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக 29 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதையடுத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் குன்னூரில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜயகாந்த், தமிழக மக்களை ஏமாற்றுவதிலேயே திமுக, அதிமுக கட்சிகள் குறியாய் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். திமுக தலைவர் கருணாநிதி, தம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தனது திருமண மண்டபத்தை இடித்ததாகவும், தற்போது தனது கட்சியை உடைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் மக்களுக்காகவே நான் என கூறும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டை மக்களுக்கு தர தயாரா? என கேள்வி எழுப்பினார். விரோதியை கூட மன்னித்துவிடலாம், ஆனால்,துரோகிக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது என்றும் விஜயகாந்த் ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications