அன்பான ஆர்கே நகர் வாக்காளப் பெருங்குடி மக்களே! இதோ உங்களைத் தேடி வருகிறார் 'கேப்டன்'..'கேப்டன்'
ஆர்கே நகர் தொகுதியில் ஏப்ரல் 6-ந் தேதி முதல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சென்னை: விறுவிறுப்பாக மட்டுமே நடந்து கொண்டு இருக்கும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களத்தை அமர்க்களப்படுத்த வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஏப்ரல் 6-ந் தேதி முதல் 3 நாட்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராக வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் போட்டியிடுகிறார். இதுவரை தேமுதிக முழு வீச்சில் பிரசாரத்தை மேற்கொள்ளாமல் இருந்து வருகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், சாதாரண செக்கப்புக்காக மருத்துவமனைக்கு சென்றவர் இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. இதனால் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவாரா? என்ற சந்தேகம் இருந்து வந்தது.

3 நாட்கள் பிரசாரம்
இந்த நிலையில் விஜயகாந்த் ஏப்ரல் 6-ந் தேதி முதல் 3 நாட்கள் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவித்துள்ளார் பிரேமலதா. திரைப்படங்களில் பேசுவதைப் போலவே அரசியல் மேடைகளில் வரிந்து கட்டி வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தவர்தான் விஜயகாந்த்.

வேட்பாளர்களுக்கு அடி
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் பிரசார மேடை என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே மாறிவிட்டது. பிரசார பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் உள்ளிட்ட யாரையோ ஒருவரை அடிப்பதையே வழக்கமாக சில காலம் வைத்திருந்தார் விஜயகாந்த்.

பேச்சு குறைப்பு
அதன்பின்னர் அவரது குரலில் சில மாற்றங்கள் தென்பட அவர் பேசுவதே புரியாத ஒன்றாக இருந்தது. இதன் ஒரு கட்டத்தில் விஜயகாந்த் பேசுவதையே பாதியாக குறைத்துவிட்டார்.

எஸ்கேப் யுக்தி
இதனால் கடைசியாக கொஞ்ச நேரம் இருக்கும் போது மேடையேறுவார் விஜயகாந்த். பின்னர் நேரமாகிவிட்டது நேரமாகிவிட்டது என 5 நிமிடங்கள் கை கடிகாரத்தைப் பார்த்தபடியே கூறிக் கொண்டே மக்கழே! நன்றி வணக்கம் விடைபெறுகிறேன் என சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுவார்.

ரோபோ விஜயகாந்த்
தற்போது சமீபகாலங்களாக மேடைகளில் பேசுவதை அறவே குறைத்துக் கொண்டார். அத்துடன் தொண்டர்களுடன் புகைப்படம் எடுக்கின்றபோது கூட ஒரு ரோபோவைப் போல அமர்ந்து கொண்டு கைகளை இறுக்கி கட்டிக் கொண்டு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாதவராக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆர்கே நகரில் பிரசாரம்
இந்த நிலையில்தான் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலிலும் விஜயகாந்த் பிரசாரம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார கூட்டங்களில் என்னதான் செய்வாரோ விஜயகாந்த் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடையே அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications