மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 15 சதவீத மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்களை அதிக அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

Vijayakanth condemns power tariff hike

இந்நிலையில் மின்கட்டண உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த கட்டண உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

மின் திருட்டை தடுப்பதன் மூலமும், காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலமும் மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்ய முடியும். அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் கொள்முதல் செய்யாதிருந்தால், மின் கட்டண உயர்வை தவிர்த்திருக்க முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+