நா. முத்துக்குமாரின் மரணத்தால் வேதனை அடைகிறேன்.. விஜயகாந்த்
சென்னை: பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல தி. க. தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தமிழ் திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்து பல விருதுகளையும், இரண்டு தேசிய விருதை பெற்ற நா.முத்துக்குமார், நான் நடித்த விருதகிரி, சகாப்தம் படங்களுக்கும் பாடல்களும் எழுதியுள்ளார். இன்று காலை (14.08.2016) காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் திரையுலகினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் முத்துக்குமார் - கி.வீரமணி

கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
வளர்ந்து வரும் இளம் கவிஞர் நா.முத்துக்குமார் மறைந்தாரே!
தமிழ்த் திரைப்பட உலகில் அண்மைக் காலத்தில் அனைவரின் கவனத்தையும் தமது அழுத்தமான கருத்துச் செறிந்த பாடல் வரிகளால் ஈர்த்த கவிஞர் நா.முத்துக்குமார் (வயது 41) மறைந்த செய்தி அறிந்து திடுக்குற்றோம். இன்னும் எவ்வளவோ சாதனைகளை படைக்க வேண்டிய ஒருவரை நாம் இழந்திருப்பது வேதனைக்குரியது.
மாணவர் பருவம் தொட்டு பெரியார் திடலோடு அணுக்கமான தொடர்பு கொண்டவர். கழகப் பிரச்சார பாடல்களை எழுதிக் கொடுத்தவர். தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது, கழகத்தால் பெரியார் விருதும் பெற்ற இளந்தமிழர் ஒருவர் மறைந்தது தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பாகும். அவரிடம் பாடம் பயின்று உடல் நலனை ஓம்புங்கள் என்று அனைத்து தமிழர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் திரை உலகினர்க்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிறந்த கவிஞரும், பாடாலசிரியருமான நா. முத்துக்குமார் மறைவு செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவருடைய மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த நா. முத்துக்குமார், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கி, சிறந்த பாடலாசிரியராக வளர்ந்தார். தங்கமீன்கள் திரைப்படத்தில், மகளுக்கும் - அப்பாவுக்குமான உறவை பாடல்களில் வடித்தெடுத்த அவருக்கு 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' பாடலுக்காக தேசிய விருது கிடைத்தது. சைவம் திரைப்படத்தில் அழகே எங்கும் நிறைந்திருக்கிறதென்ற 'அழகே, அழகே' பாடலுக்காக இரண்டாவது முறை தேசிய விருது பெற்றார்.
திரைப்பாடல்கள் மூலமும், கவிதைகள் மூலமும் கலை உலகில் நீங்கா இடம்பெற்ற நா.முத்துக்குமார் இளம் வயதில் மரணித்திருப்பது ஆழ்ந்த வருத்தம் தருகிறது. அவரது இணையர் தீபலஷ்மி, குழந்தைகள், குடும்பத்தார், நண்பர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications