காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டு ஆஞ்சாதவர் வைகோவின் தாயார்- விஜயகாந்த் இரங்கல்
சென்னை: தனது தள்ளாத வயதிலும் டாஸ்மாக் மதுக்கடையை மூடவேண்டும் என்ற இலட்சியத்திற்காக நாள் முழுவதும் உண்ணாவிரதமிருந்து போராடியவர். காவல்துறையின் அடக்குமுறையை கண்டு சிறிதும் அஞ்சாதவர் வைகோவின் தாயார் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு பேரதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவரது இல்லத்தில், அவரை நேரில் சந்தித்தபோது என்மீது காட்டிய பாசமும், பரிவும், விருந்தோம்பலும் என்னை நெகிழ வைத்தது. அவர் தனது தள்ளாத வயதிலும் டாஸ்மாக் மதுக்கடையை மூடவேண்டும் என்ற இலட்சியத்திற்காக நாள் முழுவதும் உண்ணாவிரதமிருந்து போராடியவர். காவல்துறையின் அடக்குமுறையை கண்டு சிறிதும் அஞ்சாதவர்.

அரசியல் போராட்ட களத்தில் பெண்களும் இறங்கி போராடவேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த வீரத்தாய்க்கு எனது வீரவணக்கம்.
அந்த வீரத்தாயை இழந்து வாடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மதிமுகவை சேர்ந்த தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications