வேட்டியை மடித்துக் கட்டி வண்டி நிறைய நிவாரணப் பொருட்கள் ஓடி ஓடி போய் பார்வையிடும் விஜயகாந்த்
தூத்துக்குடி: வெள்ளம் பாதித்த பகுதிகளில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வண்டி நிறைய நிவாரணப் பொருட்களுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலம் வரும் காட்சிகள் நெகிழ்வை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மிகவும் வெள்ளந்தியானவராக கருதப்படுகிறவர்... பொது இடங்களிலே கூட கோபத்தை அடக்கிக் கொள்ளாமல் வெளிப்படுத்திக் கொள்ளக் கூடியவர்...
வெளிநாடு போய்விட்டு திரும்பினால் நான் பேப்பரே படிக்கவில்லை; என்ன நடந்ததுன்னே தெரியாது என வெளிப்படையாகப் பேசக்கூடியவர். மழை வெள்ளத்தால் மக்கள் உயிரிழந்த போது தமிழக அரசு ரூ4 லட்சம் நிதி உதவி அளிக்கும் முன்னரே ரூ5 லட்சம் நிதி உதவியை வழங்குவதாக அறிவித்தவர் விஜயகாந்த்.

வெள்ளத்துக்கு நடுவே
அத்துடன் கடலூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் வண்டி வண்டியாக நிவாரணப் பொருட்களை இடுப்பளவு வெள்ளத்தில் இறங்கிப் போய் வழங்கிய கையோடு தற்போது தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளார் கேப்டன். அதுவும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தன்னைப் பற்றி கவலைப்படாமல் வேட்டியை மடித்து கண்டு அவரை இருவர் கைத்தாங்கலாக தாங்கி பிடித்தபடி வெள்ளத்தின் நடுவே அழைத்து செல்லும் காட்சியை பார்ப்போர் மனம் நெகிழவே செய்யும்,.

தூத்துக்குடியில்....
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று மதுரையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

ரூ10 லட்சம் நிவாரண உதவி
பின்னர் அவர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திரு.வி.க.நகர், குறிஞ்சிநகர், கேம்ப்-1 பகுதி, முத்தையாபுரம், தங்கமணி நகர், தெர்மல் பகுதி, ஊரணி ஒத்த வீடு, குமாரசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கினார்.

அரசு மீது புகார்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளில் தமிழக அரசின் மீட்பு பணிகள் முழுமையாக நடக்கவில்லை. அரசு மீட்பு நடவடிக்கையில் மெத்தனம் காட்டி வருகிறது என சாடினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications