விஜயகாந்துக்கு தேர்தல் தேதியே தெரியலை, இவர் எல்லாம் ஒரு கட்சிக்கு தலைவர்: ராமராஜன்
திருப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நாடாளுமன்ற தேர்தல் தேதியே தெரியவில்லை. அவர் எல்லாம் ஒரு கட்சியின் தலைவர் என்று நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தொகுதிக்குட்பட்ட பெருந்துறையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக பிரச்சார கூட்டம் நடந்தது. அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடிகர் ராமராஜன் கலந்து கொண்டு திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

பிரதமர்
தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இதுவரை பிரமதர் ஆனதில்லை. இம்முறை முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் ஆக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது.

ப.சி., வாசன்
மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்கள் ஏன் போட்டியிடவில்லை?. அவர்கள் போட்டியிட்டாலும் டெபாசிட் கூட கிடைக்காது.

விஜயகாந்த்
எப்பொழுதும் தெளிவாக பேசும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தின்போது மே மாதம் 16ம் தேதி நடக்கும் தேர்தலில் அனைவரும் வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் நடக்கும் தேதியே தெரியாத அவர் ஒரு மாநில கட்சியின் தலைவர். அவருக்கு ஜெயலலிதா தான் எதிர்கட்சி தலைவர் என்ற பதவியை அளித்தார். அவர் மட்டும் தனித்து போட்டியிட்டிருந்தால் ஒரு தொகுதி கூட கிடைத்திருக்காது.

ஆடு, மாடு
ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த ஆடு, மாடுகள் குட்டிகள் போடும். அதனால் ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும். ஆனால் கருணாநிதி கொடுத்த டி.வி. குட்டி போடுமா? ரிப்பேர் தான் ஆகும்.

அதிமுக
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று அதை எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்கும் வகையில் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ராமராஜன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications