நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்: விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், சரத்குமார் வாழ்த்து
சென்னை: கடந்த ஆண்டில் நாம் பட்ட கஷ்டங்கள் நீங்கி நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த ஆண்டு முழுவதும் பட்ட கஷ்ட, நஷ்டங்கள் நீங்கி பிறக்கும் புத்தாண்டிலாவது நல்ல காலம் பிறக்கும் என்று நம்பிக்கையோடு தமிழ்ப் புத்தாண்டை வரவேற்போம் என்று கூறியுள்ளார். தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ் மக்கள் அனைவரும் அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் வாழ்த்து
பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் ஊழல்களும், தீமைகளும் அகன்று உண்மையும், நன்மையும் துணை சேரும் என்று நம்புவோம் என்று தெரிவித்துள்ளார். உலகுக்கே உணவு படைக்கும் உழவர் வாழ்விலும், உழைக்கும் தமிழர் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் சூழ வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சரத்குமார் வாழ்த்து
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில், மீனவர்கள் உள்ளிட்ட தமிழர்களின் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதே இந்த நன்னாளில் நமது கோரிக்கை என்று தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் வாழ்வில் வளமையும், மகிழ்ச்சியும் நிறையும் வகையில் புத்தாண்டு அமைய வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications