திமுக, அதிமுக கட்டிய வீட்டுக்குள் புகுந்த கருநாகங்கள் - விஜயகாந்த் தாக்கு
சென்னை: திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் கட்டிய வீட்டிற்குள் புகுந்த கருநாகங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தே.மு.தி.க., மக்கள் நல கூட்டணி, தமாகா சார்பில் சென்னையை அடுத்த தாம்பரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் கட்டிய வீட்டுக்குள் புகுந்த கருநாகங்கள்.

தி.மு.க. என்றால், தில்லு முல்லு கழகம், அ.தி.மு.க. என்றால் அனைத்து தில்லு முல்லு கழகம். இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி வேண்டுமா, இல்லை அதிமுக, திமுக. வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். திமுக தலைவர் கருணாநிதிக்கும், சரி, முதல்வர் ஜெயலலிதாவிற்கும் சரி என்னை கண்டாலே பிடிக்காது.
அன்று நடந்ததைப் போல் இன்று நடப்பதும் சுதந்திர போர்தான். தமிழகத்தை கொள்ளையடிக்கும் அதிமுக ஆட்சியை எதிர்த்து தற்போது தேர்தல் போர். தற்போது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகின்ற தேர்தல் இது. இந்த தேர்தலில் அனுதாபத்தை ஏற்படுத்த கருணாநிதி முயல்கிறார் என குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், ஸ்டாலினின் எண்ணங்களும் நோக்கங்களுமே அவரை அழித்துவிடும். எங்கள் கூட்டணி மக்களுக்கு பின்னால் இருக்கிறது. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மக்களுக்காக நான் என்று ஜெயலலிதா கூறுவது அனைத்து சொத்தையும் கொள்ளையடித்தது போகத்தான்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. கூட்டணியில் தப்பு செய்தால் தட்டிக் கேட்க 5 பேர் உள்ளனர். எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டணி தர்மத்தை கட்டிக்காப்போம்.
எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலை தருவோம். நாளை அல்லது நாளை மறுநாள் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications