நடக்கப்போவது சட்டசபை தேர்தல் அல்ல; யுத்தம்: முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார் விஜயகாந்த் !
கும்மிடிப்பூண்டி: தமிழகத்தில் நடக்க இருப்பது சட்டசபை தேர்தல் அல்ல இது ஒரு யுத்தம் என்று முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் இன்று மாலை முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். தே.மு.தி.க. - மக்கள் நலக்கூட்டணி சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பேசினார்.

அவர் பேசியதாவது: தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் தான் அதிக மணல் கொள்ளை நடைபெறுகிறது. கிரானைட் ஊழல் வழக்கில் சகாயம் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காது ஏன் ? என கேள்வி எழுப்பினார்.
கிரானைட் வழக்கில் நீதிபதி மகேந்திர பூபதி மீது மட்டும் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை போதுமானதல்ல. நீதிபதி சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில் பி.ஆர்.பழனிச்சாமியை கைது செய்யவில்லை. கிரானைட் விவகாரத்தில் ரூ. 1 லட்சம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது.
ஜெயலலிதாவின் படிப்படியான மதுவிலக்கு என்து பொய்யானது. நான் பேச ஆரம்பித்தால் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் தாங்கமாட்டார்கள். நான் எதற்கும் பயப்படமாட்டேன். திமுக, அதிமுகவிற்கு மாற்று தேமுதிக - ம.ந.கூட்டணி தான்.
ஒரே கொள்கைக்காக தேமுதிக, மதிமுக, தமாகா, விடுதலை சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். நட்சத்திர பேச்சாளரான தமக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் விஜயகாந்த் குற்றம்சாட்டினார். மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் நடைபெறவுள்ளது சட்டசபை தேர்தல் அல்ல இது ஒரு யுத்தம் என்றார் விஜயகாந்த்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications