3 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு.. கள்ள ஓட்டுக்களை தடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்
தஞ்சை உள்பட 3 மூன்று தொகுதி தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல்களில் கள்ள ஓட்டுகளை யாரும் பதிவு செய்யாத வகையில் தடுத்து முறையான தேர்தலாக நடத்திட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இன்று நடைபெறும் தேர்தலில் தொகுதி மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தவறாது வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும்.

வாக்குப்பதிவில் எவ்வித முறைகேடுகளும் நடக்காவண்ணம், போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் சமமாக தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் தண்டனைகளை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்.
தே.மு.தி.க. சார்பாக மூன்று தொகுதி வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியாரையும், தேர்தல் அதிகாரிகளையும் சந்தித்து அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் தொகுதி முழுக்க பணம் வினியோகம் செய்து முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக தேர்தலில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று முறையிட்டுள்ளனர்.
தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் விதிமுறைகள் வந்ததாக கூறி வாகனங்களை பரிசோதிப்பதாலோ, வாக்குச்சாவடிகளில் கேமரா வைப்பதாலோ, மத்திய ராணுவப்படை அணிவகுப்புகளோ, தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற எந்த செயல்பாடுகளும் முறைகேடுகளை தடுக்க முடியாமல் கண்துடைப்பு நாடகங்களே அரங்கேற்றி வருகிறது.
எனவே இந்த தேர்தல்களில் கள்ள ஓட்டுகளை யாரும் பதிவு செய்யாத வகையில் தடுத்து முறையான தேர்தலாக நடத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications