பார்க்காதே!... படிக்காதே!!.... பேசாதே!!!: தேமுதிகவினருக்கு விஜயகாந்த் போட்ட மூன்று கட்டளைகள்
சென்னை: கேப்டன் டிவியைத் தவிர மற்ற எல்லா டிவிகளும் பொய் செய்திகளைத்தான் சொல்கின்றன அவற்றை எல்லாம் தேமுதிக தொண்டர்கள் பார்க்க வேண்டாம் என்று அக்கட்சித்தலைவர் விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இணைந்து தேமுதிக தேர்தலைச் சந்தித்தது. கூட்டணியில் அதிக இடங்களைப் பெற்று போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
எனினும் ராஜ்யசபா எம்.பி பதவியும், அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. அதற்கும் வாய்ப்பின்றி போகவே அப்செட் ஆனார் விஜயகாந்த்.

தொண்டர்களுடன் கேப்டன்
லோக்சபா தேர்தல் முடிவினை மறந்துவிட்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு தற்போது தொண்டர்களை சந்தித்து வருகிறார். தொண்டர்கள் மத்தியில் பேசும் விஜயகாந்த் முக்கியமாக மூன்று விசயங்களை வலியுறுத்தி வருகிறாராம்.

பார்க்கவே பார்க்காதே
டிவிகளில் எல்லாம் பொய் செய்திகளைத்தான் சொல்கின்றனர். எனவே வேறு எந்த டிவிகளையும் பார்க்க வேண்டாம். நீங்கள் வளரவேண்டும் என்றால், கட்சி வளரவேண்டும் என்றால் கேப்டன் டிவியை மட்டுமே பாருங்கள் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

படிக்கவே படிக்காதே
அனைத்து நாளிதழ்களும், வார இதழ்களும் தேமுதிகவை அழிக்கும் செய்திகளைத்தான் போடுகின்றன. எந்த பத்திரிகைகளையும் படிக்காதீர்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

பேசவே பேசாதே
அடுத்த கட்சி விவகாரங்களைப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். நம் கட்சியைப் பற்றி பேசுங்கள். அதை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று விஜயகாந்த் தனது தொண்டர்களுக்கு டெரர் கட்டளைகளைப் போட்டிருக்கிறாராம்.
இதெல்லாம் நடக்குமா கேப்டன்?
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications