10ம் தேதி 'மாங்காயைத்' தேடி தைலாபுரம் தோட்டத்துக்குச் செல்கிறார் விஜயகாந்த்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தைலாபுரம் செல்கிறார். அங்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸைச் சந்திததுப் பேசுகிறார். சமரசம் ஆகிறார். இருவரும் இணைந்து பேட்டியும் கொடுக்கவுள்ளனர்.. இதுதான் பாமக மற்றும் தேமுதிக வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்.
ஏப்ரல் 10ம் தேதி இந்த சந்திப்பு நடக்கவுள்ளது. விழுப்புரம் தனித் தொகுதி வேட்பாளர் உமாசங்கரை ஆதரிததுப் பிரசாரம் செய்ய அன்று விழுப்புரம் வருகிறார் விஜயகாந்த். அப்போதுதான் தைலாபுரம் செல்கிறார். அன்புமணி ராமதாஸ் ஏற்பாட்டின்பேரில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாம். விஜயகாந்த்துடன் அவரது மனைவி பிரேமலதாவும் உடன் போவார் என்று தெரிகிறது.

கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டின்போது மிகவும் பிரச்சினையானது இந்த இரு கட்சிகளிடையேதான். இதில் தேமுதிக கை ஓங்கி, பாமக கை தாழ்ந்ததால் கடும் அதிருப்தி அடைந்தார் ராமதாஸ். உடனடியாக பிரசாரத்தை நிறுத்தினார். ராஜ்நாத் சிங் வந்தபோது கூட அவர் வரவில்லை. அப்செட்டாக இருந்து வநதார. உடல் நலன் சரியில்லை என்றும கூறப்பட்டது.
இந்த நிலையில் தேமுதிகவுடன் சமரசமாகப் போவதுதான் எதிர்காலத்துக்கு நல்லதுஎன்று அன்புமணி எடுத்துக் கூறி ராமதாஸை சமாதானப்படுத்தியுள்ளாராம். இதையடுத்தே விஜயகாந்த்தையும், தந்தையையும் சந்திக்க வைக்கிறார் அவர்.
ஒரு காலத்தில் விஜயகாநத்தை கடுமையாக சாடிப் பேசியவர் ராமதாஸ். குடிகார கட்சி, நடிகர் என்றெல்லாம் விஜயகாந்த்தையும், தேமுதிகவையும் சாடியவர் அவர். விஜயகாந்த் பெயரைக் கூட சொல்ல மாட்டார். அப்படிப்பட்ட ராமதாஸ், விஜயகாந்த்தைச் சந்திக்கும்போது அந்தக் காட்சி எப்படி இருக்கும என்பது கியூரியாசிட்டியை தூண்டி விடுவதாக உள்ளது.
ராமதாஸ், விஜயகாந்த் சந்திப்புக்குப் பின்னர் இருவருக்கும் இடையிலான இரும்புத் திரை அகன்று சகஜமாவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications