அண்ணன் கையில் கருப்புக் கண்ணாடி.. எங்க வாயில கருப்புத் துணி..!
சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டசபை வளாகத்தில் கருப்புத் துணியை வாயில் கட்டி தர்ணா போராட்டம் நடத்தியதை கட்சித் தலைவர் விஜயகாந்த் சூப்பர்வைஸ் செய்து வேடிக்கை பார்த்து விட்டு கிளம்பிச் சென்றது சட்டசபை வளாகத்தில் இன்று நடந்த பரபரப்பான நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது.
சட்டசபைக் கூட்டத்தில் ரகளை செய்ததற்காக தேமுதிக எம்.எல்.ஏக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார். அந்த சமயத்தில் விஜயகாந்த் சட்டசபைக்கு வராததால், அவர் மட்டும் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையிலிருந்து தப்பியுள்ளார். இருந்தாலும் விஜயகாந்த் தொடர்ந்து சபைக்கு வராமல்தான் உள்ளார்.
இந்த நிலையில் இன்று சட்டசபை வளாகத்தில் சஸ்பெண்ட் ஆன தேமுதிக எம்.எல்.ஏக்கள் தர்ணாப் போராட்டம் நடத்தினர். வாயில் கருப்புத் துணியைக் கட்டியபடி. அவர்களை விஜயகாந்த் நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் லெட்ஜரில் கையெழுத்துப் போட்டு விட்டு கிளம்பிப் போய் விட்டார்.

கையில் கருப்புக் கண்ணாடி
கருப்பு எம்ஜி.ஆர். என்று தொண்டர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த் கையில் கருப்புக் கண்ணாடியை பிடித்தபடி..வாயில் கருப்புத் துணியுடன் போராட்டம் நடத்தி வந்த தனது கட்சி எம்.எல்.ஏக்களைப் பார்த்துப் பேசிய காட்சி....

எல்லாம் கரெக்டா நடக்குதல்ல
இப்போது கண்ணாடி கையிலிருந்து கண்ணுக்குத் தாவி விட்டது.. வேகாத வெயிலில் தரையில் அமர்ந்திருக்கும் தனது கட்சி எம்.எல்.ஏக்களைப் பார்த்தபடி அணிவகுப்பு மரியாதையை ஏற்பது போல நடந்து வரும் விஜயகாந்த்...!

இந்தாப்பா...
இப்போது எம்.எல்.ஏக்களைப் பார்த்து கையை அசைத்தபடி பேசுகிறார் விஜயகாந்த்.

கண்ணாடியைக் கழட்டியாச்சே!
இப்போது கருப்புக் கண்ணாடியைக் கழற்றி தனது கைக்குக் கொண்டு வந்த விஜயகாந்த், புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர்களைப் பார்த்து பேசுகிறார்.

போதும்ப்பா எந்திரி எந்திரி
போராட்டம் நடத்தியது போதும் எந்திரிங் என்று கேப்டன் கூற படபடவென்று எழுந்திருக்கும் எம்.எல்.ஏக்கள். (சென்னையில் வெயில் இன்று ரொம்ப ஜாஸ்தி...!)

அவ்ளோதான்!
ஒரு வழியாக விஜயகாந்த் சொல்லி போராட்டத்தை முடித்துக் கொண்ட எம்.எல்.ஏக்கள்.. செய்தியாளர்களிடம் பேசும் விஜயகாந்த்.

தர்ணா பண்றீங்களா...!
தர்ணாவில் ஈடுபட்ட தேமுதிக எம்.எல்.ஏக்களை திமுக தலைவர் துரைமுருகன் சந்தித்துப் பேசி திமுகவின் ஆதரவைத் தெரிவித்த போது எடுத்த படம்....!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications