ஓபிஎஸ் செய்ய வேண்டியதை "கேப்டன்" செய்றார்... : ஈவிகேஎஸ் பாராட்டு
சென்னை: மக்களுக்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்ய வேண்டிய வேலையை, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் செய்து வருகிறார் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு கட்டும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை பிரதமரைச் சந்திக்க உள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இது தொடர்பாக முதலில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார் விஜயகாந்த். அங்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவனை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, சிதம்பரம், திருநாவுக்கரசு மற்றும் குஷ்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முதல்வர் பன்னீர்செல்வம் மேகதாது அணை குறித்த பிரச்னையில் அனைத்து கட்சியினரையும் அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்தித்திருக்க வேண்டும். ஆனால், தமிழர் பிரச்னை தொடர்பாக அவர் மோடியை சந்திக்கவில்லை என்பதால் மற்றவர்களை அழைத்துச் செல்லவில்லை.
இந்நிலையில், பன்னர்செல்வம் செய்ய வேண்டிய வேலையை, விஜயகாந்த் தற்போது செய்து வருகிறார். பிரதமருடன் பேச அனைத்து கட்சியினரை அவர் சந்தித்து வருகிறார். காங்கிரஸ் தரப்பில் ஒருவர் விஜயகாந்த்துடன் சென்று, பிரதமர் மோடியை சந்திப்பார்,' என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications