என்ன பண்ணலாம்?.. நாமக்கல்லில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய விஜயகாந்த்!
நாமக்கல்: உங்களுடன் நான் என்ற தலைப்பில் மாவட்ட வாரியாக கட்சியினரை சந்தித்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாமக்கல்லில் கட்சியினருட் ஆலோசனை நடத்தினார்.
இன்று நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அவர்களிடம் கட்சி வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த். நிர்வாகிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் கட்சியில் அதிக அளவில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். முதலில் உங்களது குடும்பத்தில் உள்ள அனைவரையும் கட்சியில் சேருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆலோசனையின்போது, தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உடன் இருந்தார்.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்று பட்டி தொட்டியெங்கும் பிரசாரம் செய்தவர் விஜயகாந்த். இவரது கட்சி பாஜக கூட்டணியில் அதிகபட்சமாக 14 தொகுதிகளில் போட்டியிட்டும் கூட ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.
சில கூட்டணிக் கட்சிகளின் உள்ளடி வேலை, மக்களிடையே தேமுதகவின் சீட் பேரம் உள்ளிட்டவை மீதான கடும் அதிருப்தி, விஜயகாந்த்தின் போக்கு குறித்து நிலவி வரும் அதிருப்தி, ஜெயலலிதா அலை விசியது, மோடி அலை கை கொடுக்காமல் போனது என பல காரணங்களால் தேமுதிக பலமான தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து மாவட்ட வாரியாக கட்சியினருடன் கலந்து வருகிறார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications