ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றக் கோரி விஜயகாந்த் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் எனக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு செய்தனர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது விஜயகாந்த், பிரேமலதா, 3 தேமுதிக எம்.எல்.ஏக்கள் உள்பட 5 தேமுதிகவினர் மீது தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Vijayakanth moves to supreme court

இவையனைத்தையும் தள்ளுபடி செய்யக் கோரி விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த நிலையில் சுப்பிரமணியம் சாமி தன் மீது ஜெயலலிதா அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் போய் ஸ்டே வாங்கி விட்டார்.

இதைப் பார்த்த விஜயகாந்த் உள்ளிட்டோர் தாங்களும் அந்த வழக்குடன் தங்களை இணைக்கப் போவதாக உயர்நீதிமன்றத்தில் கோரினர். இதை உயர்நீதிமன்றமும் ஏற்றது. ஆனால் சொன்னபடி மனு செய்யாமல் இருந்தது விஜயகாந்த் தரப்பு. இதற்காக நேற்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் தலைமையிலான பெஞ்ச்சிடம் விஜயகாந்த் உள்ளிட்டோர் கண்டனத்தை வாங்கிக் கட்டி் கொண்டனர். மேலும் 5 பேருக்கு அபராதமும் விதித்தனர் நீதிபதிகள்.

இதையடுத்து இன்று அவசரம் அவசரமாக உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் உள்ளிட்டோர் சார்பி்ல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+