மறைந்தார் இப்ராகிம் ராவுத்தர்.. கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த்
சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடலுக்கு அவரது நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். கடைசியாக இவர், "புரியாத ஆனந்தம் புதிதாய் ஆரம்பம்" என்ற படத்தை தயாரித்தார்.

இருதயம் மற்றும் சிறுநீரக கோளாரால் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கோமா நிலையில் இருந்த அவரை நண்பர் விஜயகாந்த் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். "நண்பா நீ எழுந்து வருவாய்" என்று உருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ராவுத்தர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் உடலுக்கு அவரது நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் அவருடன் பிரேமலதா சுதீஷ் ஆகியோரும் சென்றிருந்தனர். அதேபோல், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன், பேரரசு உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், இப்ராஹிம் ராவுத்தர் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications