தூசி தட்டப்படுகிறது எம்.ஜி.ஆர் வேன்.. பிரசாரத்திற்கு பயன்படுத்த விஜயகாந்த் முடிவு
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய தேர்தல் பிரசார வேனை, வரும் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆரின் ரசிகரான விஜயகாந்த், அவரின் மனைவி ஜானகி அம்மையாருடனும் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். இந்த நட்பை பயன்படுத்தி, 1996ம் ஆண்டு ஜானகியிடமிருந்து எம்.ஜி.ஆர் நினைவாக அவரது வேனை எனக்கு வழங்குகள் என்று கேட்டு விஜயகாந்த் அதை பெற்றுக்கொண்டார்.

2005ம் ஆண்டு, தேமுதிகவை துவக்கிய விஜயகாந்த், மதுரையில் நடந்த தனது கட்சி மாநாட்டிற்கு இந்த பிரசார வேனில் மேடைக்கு வந்தார். விருதாச்சலம் தொகுதியில் பிரசாரத்தின்போது அந்த வேனில், சில இடங்களில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். இதன்பிறகு, மீண்டும் ஷெட்டுக்கே சென்றது அந்த வேன். வேனை கேட்டுப்பெற்ற விஜயகாந்த், அதை முறையாக பராமரிக்கவில்லை என ஊடகங்களில் சில தினங்கள் முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், வேனை தூசி தட்ட விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், எம்.ஜி.ஆரை போன்று, தமிழகத்தில் ஆட்சியை பிடித்து கோலோச்ச, அந்த வேன் சென்டிமென்ட் உதவும் என்பது விஜயகாந்த்தின் எண்ணம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications