விருத்தாசலம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை.. விஜயகாந்த் தொகுதிகளில் ஒளிந்திருக்கும் ரகசியம்!
சென்னை: விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு முக்கியமான சென்டிமென்ட் காரணமாக கூறப்படுகிறது.
கடந்த, 2005ம் ஆண்டு, தே.மு.தி.க. கட்சியை துவக்கிய விஜயகாந்த், இம்முறையோடு சேர்த்து 3 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். மூன்றுமுறையும், விஜயகாந்த் போட்டியிட தேர்ந்தெடுத்த தொகுதிகளில் ஒரு முக்கிய சென்டிமென்ட் ஒழித்து வைக்கப்பட்டுள்ளது.
போட்டியிடும் தொகுதியை தேர்ந்தெடுக்கும் முன்பு அந்த சென்டிமென்ட் நிறைவேறுகிறதா என்பதைதான் விஜயகாந்த் பார்த்து களமிறங்குவதாக கூறுகின்றனர் தேமுதிகவினர்.

விருதாசலம்
2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. தமிழகத்தில் உள்ள, 234 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்திய விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார்.

விருதகிரி
விருதாசலத்தில் விஜயகாந்த் போட்டியிட காரணம், அந்த தொகுதியில் உள்ள சிவன் கோவிலின் மூலவர் பெயர், 'விருதகிரி' என்பதாகும்.

அர்த்தநாரி
2011 தேர்தலில், அதிமுகவோடு கூட்டணி வைத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டார். இதற்கு காரணம், ஷிவந்தியத்தில் உள்ள சிவன் பெயர், 'அர்த்தநாரி' என்பதாகும்.

இதுதான் காரணம்
'ரி' என்ற எழுத்தில் முடியும் சிவன் கோவில் உள்ள தொகுதியை தான் தேர்ந்தெடுத்து வருவதாக, ஒருமுறை, விஜயகாந்த், மணலுார்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது விளக்கம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர்
விஜயகாந்தின் சென்டிமென்ட்டுக்கு கைமேல் பலன் கிடைத்து, அவர், நிழல் முதல்வர் என்று அழைக்கப்படும், எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்தார். தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதே சென்டிமென்ட்
இந்நிலையில், நடைபெறவுள்ள தேர்தலிலும், 'ரி' சென்டிமென்ட் மீது நம்பிக்கை வைத்து உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுகிறார் விஜயகாந்த். இம்முறை முதல்வராகிவிடலாம் என்பது அவரது நம்பிக்கை.

கிராம அர்த்தநாரி
உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள எலவனாசூர்கோட்டை என்ற கிராமத்தில், 'கிராம அர்த்தநாரி' என்ற பெயருடன், பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இதுவும் 'ரி' என்ற எழுத்தில் நிறைவடையும் சிவன் கோயில் என்பதால் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications