வர்றப்ப வடை கொடுத்தாங்க.. வேன் குலுங்குச்சா... கீழே விழுந்துருச்சு.. விஜயகாந்த் கவலை!
உளுந்தூர்ப்பேட்டை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது மோசமான சாலையால் தான் வடை சாப்பிட முடியாமல் போன சோகத்தைச் சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
விஜயகாந்த் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருவோர் மூளை கலங்க நல்ல விஷயங்களை கற்றுச் செல்கிறார்களோ என்னவோ, ஆனால் வயிறு குலுங்கச் சிரித்துச் செல்கிறார்கள். அந்த அளவுக்கு கலகலவென பேசி வருகிறார் விஜயகாந்த்.

இப்படித்தான் தான் போட்டியிடும் உளுந்தூர்ப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பி. குளத்தூர் பகுதியில் பிரச்சாரம் செய்து வேனில் இருந்தபடி பேசினார் விஜயகாந்த்.
அவர் பேசும்போது, நான் வேனில் வரும் போது எனக்கு சாப்பிட வடை கொடுத்தார்கள். ரோட்டில் வேன் வரும் போது குலுங்கியதால் அந்த வடை கீழே விழுந்து விட்டது. அந்த அளவிற்கு இந்த ரோடு படுமோசமாக இருக்கிறது.
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இந்த தொகுதியில் எங்கும் சரியாக ரோடு போடவில்லை. நான் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ரோடு போட்டு தருவேன்.
இங்கே விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை ரூ.500 கோடி அளவிற்கு பாக்கி உள்ளதாக கேள்விப்பட்டேன். தேமுதிக ஆட்சிக்கு வந்ததும் இந்த நிலுவை தொகை உடனடியாக வழங்கப்படும். உங்களுக்கு ரூ.500 கோடி வேண்டுமா என்று கேட்டார். உடனே மக்கள் வேண்டும் வேண்டும் என்று கூறினார்கள்.
முன்னதாக வேனுக்குள் இருந்தவாறு பேசிய விஜயகாந்த்தை சிலர் வெளியே வந்து பேசுமாறு அழைத்தனர். அதைக் கேட்டு முகம் மாறிய விஜயகாந்த், நான் ஜெயலலிதா அல்ல. என்னால் வேன் மீது ஏறியும் பேச முடியும். வேன் உள்ளே அமர்ந்தும் பேச முடியும் என்றார் சற்றே கோபமாக.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications