ராப்பகலா குடிக்கிறதா 'ஊத்திக் கொடுத்தவங்க" சொல்றாங்க..: விஜயகாந்த் திடீர் ஆவேசம்
திண்டுக்கல்: என்னைப் பார்த்து ராப்பகலா குடிக்கிறதா சொல்கிறவர்கள்தான் எனக்கு ஊத்திக் கொடுத்தாங்க என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென ஆவேசமாக பேசியுள்ளார்.
திண்டுக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட ஒட்டன்சத்திரத்தில் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது பேசியதாவது:

பழனிக்கும் சபரிமலைக்கும் ரயில்பாதை அமைப்பதாக சொன்னார்கள் ஆனால் செய்யவில்லை. வரும் 13-ந் தேதி பங்கு உத்திர நாள்.. அன்று கரூரில் ஜெயலலிதா கூட்டம் நடைபெறுகிறது. அன்று பொதுமக்களுக்கு பேருந்துகள் கிடைக்காமல் கரூருக்கு போய்விடும்.
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய காய்கறி சந்தை ஒட்டன்சத்திரத்தில்தான் இருக்கிறது. ஆனால் குளிர்பதனக் கிடங்கு இங்கு இல்லை.
இந்த பகுதியில் மின்சாரமும் இல்லை.. குடிக்க குளிக்க தண்ணீரும் இல்லை. ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் கேட்பாரற்று கிடக்கிறது.
என்னைப்பாத்து ராப்பகலா குடிக்கிறதா சொல்கிறார்கள்... எனெனில் அவர்கள்தான் எனக்கு ஊத்திக்கொடுத்தாங்க.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.












Click it and Unblock the Notifications