இடைத்தேர்தலில் தேமுதிகவிற்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் உண்மையானவை: விஜயகாந்த்
நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் தேமுதிகவிற்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் உண்மையான வாக்குகள் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆளும் கட்சியாக இருப்பவர்கள் வெற்றி பெறுவதும், எதிர்கட்சியாக இருப்பவர்கள் தோல்வி பெறுவதும், இடைத்தேர்தல்களில் எழுதப்படாத விதியாக மாறியுள்ளது. இந்தசூழ்நிலையில் தேமுதிகவுக்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் உண்மையான வாக்குகள் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், எலக் ஷன் என்றாலே கலக் ஷன் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில், தேமுதிகவுக்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் உண்மையான வாக்குகள். தோல்வி என்றைக்கும் நிரந்தரம் இல்லை, மாற்றம் ஒன்றுதான் என்றும் மாறாதது. அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேமுதிக வேட்பாளர்கள் உட்பட யாரையும் அனுமதிக்காமல் அரசு அதிகாரிகள் செயல்பட்டது உண்மையிலையே கண்டனத்துக்குரியது.

அனுமதி வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினரை கைது செய்து, பின் விடுவித்தது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. அதிக பணம் விநியோகித்ததன் விளைவாக மறுதேர்தல் நடந்த போதும், மீண்டும் அதே பாணியில் தொகுதி முழுக்க பணம் விநியோகம் செய்து முறையில்லா தேர்தல்களை மூன்று தொகுதிகளிலும் அரங்கேற்றியுள்ளனர்.
ஆளும் கட்சியாக இருப்பவர்கள் வெற்றி பெறுவதும், எதிர்கட்சியாக இருப்பவர்கள் தோல்வி பெறுவதும், இடைத்தேர்தல்களில் எழுதப்படாத விதியாக மாறியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.
அதேபோல் இப்பொழுது நடக்கும் அதிமுக ஆட்சியில் அனைத்து இடைத்தேர்தல்களிலும் திமுக தோல்வியுறுவதும், பாண்டிச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரசே வெற்றி பெற்றதுமே அதற்கான சான்று. எனவே ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் மூலம் பெரும் இதுபோன்ற வெற்றிகளை பற்றி நாம் அதிகம் யோசிக்கத்தேவையில்லை.
இந்த மூன்று தேர்தல்களிலும் அயராது பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்தவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றிகளும், தோல்விகளும் மனித வாழ்வில் எல்லோருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடப்பவை, எனவே இந்த இடைத்தேர்தலின் முடிவுகளை பொருட்படுத்தாது, மக்களுக்கான பணியில் நாம் என்றும் முழுமூச்சுடன் செயல்படுவோம். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications