கட்சியை விட்டுப் போறவங்களைத் திட்டத்தாங்க முடியும், வாழ்த்தவா முடியும்... விஜயகாந்த் 'நச்'!
சென்னை: கட்சியை விட்டு போகிறவர்களை வாழ்த்தியெல்லாம் அனுப்ப முடியாது. திட்டத்தான் முடியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக பேசியுள்ளார்.
இதன் மூலம் அவரது கட்சியை விட்டு லேட்டஸ்டாக வெளியேறிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அன்லிமிட்டெட் வசவுகள் கிடைத்திருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது.
சென்னையில் தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட விஜயகாந்த் பேசுகையில், தேமுதிக எப்போதும் தாழ்ந்து போகாது. நான் யாரையும் நம்பவில்லை. தெய்வத்தையும், மக்களையும் நம்பியே தேர்தலை சந்திக்கிறேன்.

கட்சியை விட்டுப் போகிறவர்களை திட்டத்தான் முடியும். வாழ்த்தவெல்லாம் முடியாது.
இடைத் தேர்தல் என்றால் அதில் ஆளுங்கட்சி ஜெயி்ப்பதும், எதிர்க்கட்சி தோற்பதும் சகஜம்தான், இயற்கை.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு இருக்கிறது. அதை தீர்க்க வழியைக் காணோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications