For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெங்கு காய்ச்சல்.... மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் சிகிச்சை கொடுங்க- விஜயகாந்த்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நடிகர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது?-விஜயகாந்த் கேள்வி-வீடியோ

    சென்னை: டெங்கு காய்ச்சலுக்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

    டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்பால் தினந்தோறும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். டெங்குவை தடுப்பதற்காகவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்து வருகிறது.

    Vijayakanth urges TN government to take action on Dengue

    எனினும் ஆங்காங்கே உயிரிழப்புகள் அதிகமாகிறதே தவிர, டெங்கு கட்டுப்படுத்தபாடில்லை. மேலும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் சாதாரண காய்ச்சல் வந்தாலே மக்கள் டெங்குவோ என்று அச்சம் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, தமிழக அரசு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்து உடனடியாக சிகிச்சையளித்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    DMDK's General Secretary Vijayakanth urges TN government to take action against Dengue fever.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X