எம்.ஜி.ஆர். பாடல்களை உதாரணம் காட்டியே ஜெ.வை தொடர்ந்து விமர்சிக்கும் விஜயகாந்த்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் வெளியிடுகிற அறிக்கைகளில் எம்.ஜி.ஆர். பாடல்களை உதாரணம் காட்டியே முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், அன்றாடம் ஏதேனும் ஒரு பிரச்சனையை முன்வைத்து அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இதில் கடந்த சில நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிக்கும் அறிக்கைகளும் அடக்கம்.

பஞ்ச் அட்வைஸ்
ஜெயலலிதாவை விமர்சிக்கும் அறிக்கைகளின் இறுதியில் தவறாமல் ஒரு எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி அதுபோல் இருக்கக் கூடாது என்ற 'பஞ்ச்' அட்வைஸும் இடம்பெற்றுவிடுகிறது.

போயும் போயும் மனிதனுக்கு....
உச்சநீதிமன்றம் கெயில் எரிவாயு குழாய்களைப் பதிக்க அனுமதி கோரி தீர்ப்பளித்தது தொடர்பாக கடந்த 6-ந் தேதியன்று விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், 'தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் அதிமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.. அதே பாணியில் உணவை உற்பத்தி செய்யும் உழவர்களையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏமாற்றி வருவதைப் பார்க்கும் போது 'போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே' என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது என சாடியுள்ளார்.

பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா
இதனைத் தொடர்ந்து நேற்று "அவசர கோலத்தில் சாலைகள்" போடப்படுவதை விமர்சித்து வெளியிடப்பட்ட விஜயகாந்த் அறிக்கையில் மறக்காமல் எம்.ஜி.ஆர். பாடல் மூலமே குட்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் "குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா" என்ற எம்.ஜி.ஆரின் பாடலில் வருகிற 'விதவிதமாக பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா' என்ற வைரவரிகள் இந்த அரசுக்குத்தான் மிகவும் பொருத்தமாக இருக்கிறது என விமர்சித்திருக்கிறார்.

உலகம் பிறந்தது எனக்காக
இன்று, திருவண்ணாமலை தீர்த்தவாரி நெரிசல் விபத்து, கும்பகோணம் மகாமகம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலும் கூட, ''உலகம் பிறந்தது எனக்காக'' என்ற சுயநலம் இல்லாமல் உலகம் பிறந்தது ஏழை எளிய மக்களுக்காக அவர்களுக்காகத்தான் இந்த ஆட்சி அதிகாரம் என்பதை மறந்துவிட வேண்டாம் என எச்சரித்திருக்கிறார் விஜயகாந்த்.
(அப்ப "உலகம் பிறந்தது எனக்காக" என எம்.ஜி.ஆர். சுயநலத்துடன் பாடினார் என்கிறாரா விஜயகாந்த் என்று அதிமுகவினர் ரிவீட் அடித்தாலும் ஆச்சரியமில்லை)
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications