அதிமுக ஆட்சி முடியும் நேரத்தில் அரசு வேலைக்கு காசு வாங்கி ஆள் சேர்ப்பு..யாரும் ஏமாறாதீங்க-விஜயகாந்த்
சென்னை: அதிமுக ஆட்சி முடிவடைய உள்ள நேரத்தில் அரசு வேலைக்கு அவசரம் அவசரமாக பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு காலிப் பணியிடங்கள் நியமிக்கப்படுகின்றன; அடுத்த அரசு அமையும்போது இந்த நியமனங்கள் அனைத்தும் ரத்தாகும் என்பதால் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டு நாட்களுக்கு முன்பு இறுதிக்கட்ட பிரசாரத்தை அரசியல் கட்சிகள் செய்வார்கள். அது மிகவும் பரபரப்பாகவும், வேகமாகவும் இருக்கும். அதை தமிழக மக்கள் ஆண்டாண்டு காலமாக பார்த்துவருகிறார்கள்.

நியமனங்களை நிறுத்துக
ஆனால் ஆளுகின்ற அதிமுக அரசு ஆட்சியை விட்டு வெளியேறும் நேரத்தில் அரசு துறையிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புகிறேன் என்கின்ற பெயரில் அவசர அவசரமாக உரிய தேர்வுகளோ, முறையான நேர்காணலோ எதுவுமின்றி, லட்சக்கணக்கில் பணத்தைபெற்றுக்கொண்டு, ஆயிரக்கணக்கானோரை அதிமுக அரசு பணியில் அமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பணி நியமனத்தை அதிமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஏன் சந்தேகம்னா...
தற்போது ஆட்சியிலுள்ள அதிமுக அரசுக்கு இன்னும் அதிகபட்சம் ஒருமாத காலம் மட்டுமே அதிகாரம் இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வந்த உடனே அதிகாரமற்ற அரசாக அதிமுக அரசு மாறிவிடும். 2011ல் ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகளில் நேர்மையான முறையில் அரசுப்பணி நியமனங்களை செய்திருந்தால், அது குறித்து யாரும் கேள்வி எழுப்பியிருக்கமாட்டார்கள். ஆனால் தற்போது அதை செய்வதால் பலத்த சந்தேகம் உண்டாகிறது.

ஏமாறாதீங்க...
உச்சநீதிமன்ற வழக்கை தனக்கு சாதகமாக்கிக் கொள்வதற்காகவே இதுபோன்று பணி நியமன வசூல் வேட்டையில் ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் ஆட்சியாளர்களின் வாக்குறுதியினை நம்பி வேலைவாய்ப்பற்று வேதனையில் இருக்கின்ற இளைஞர்கள் யாரும் அரசு வேலைக்காக இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொடுத்து ஏமாறவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். அடுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகும். அதே சமயத்தில் அதிமுக ஆட்சிக்கு வரவே இயலாது. எனவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், அதிமுக அரசின் இறுதி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து நியமனங்களும் உறுதியாக ரத்தாகும்.

சர்ச்சை அரசாணை
லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்கு "லோக் ஆயுக்தா" தமிழகத்தில் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள இந்த சமயத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தனக்கு வேண்டியவர்களை காப்பாற்றவே இதுபோன்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், லஞ்சத்தையும், ஊழலையும் இந்த அரசாணை ஊக்குவிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஜெயலலிதா அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டுசேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள் என்ற அதிமுக எம்.எல்.ஏவின் குற்றச்சாட்டும் இதன்மூலம் உண்மையாகியுள்ளது.

டிஎன்பிசி நியமனம்
மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக, அவசர அவசரமாக அதிமுகவினரை நியமனம் செய்துள்ளதை உயர்நீதிமன்றம் கண்டித்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நீதித்துறையில் இனிமேலும் பணிபுரிய தகுதி இல்லையென கட்டாய ஓய்வளிக்கப்பட்ட நீதிபதியை, நியாயமான முறையில், தகுதியான நபர்களை ஆயிரக்கணக்கில் தேர்வு செய்யும் மிக முக்கியமான இடத்தில் அவரை நியமித்துள்ளதே, ஜெயலலிதா அரசின் மிகமோசமான நிர்வாக சீர்கேட்டிற்கும், லஞ்சம், ஊழலுக்கும் சரியான உதாரணமாகும்.

உறுதியேற்கனும்
எனவே மோசமான முறையில் ஆட்சி நடத்தும் தற்போதைய அதிமுக ஆட்சியை அகற்ற, தமிழக மக்கள் உறுதியோடும், உறுதுணையாகவும் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications