விஜயகாந்த் நிச்சயம் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு தான் வருவார்: இளங்கோவன் நம்பிக்கை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு நிச்சயம் வருவார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளது என்று தான் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். விஜயகாந்த் விரைவில் கூட்டணி முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தேமுதிக
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்னும் முடிவு செய்யவில்லை. கூட்டணி குறித்து தேமுதிகவில் விஜயகாந்த் எடுப்பது தான் இறுதி முடிவு.

விஜயகாந்த்
தேமுதிகவில் உள்ள மற்றவர்கள் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. விஜயகாந்த் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு நிச்சயம் வருவார் என்று நம்புகிறேன். தேவைப்பட்டால் இது குறித்து அவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவேன்.

முதல்வர் வேட்பாளர்
தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைப்பேன் என்று விஜயகாந்த் கூறவில்லை. அதனால் கூட்டணி குறித்து அவர் எடுக்க உள்ள முடிவு பற்றி தற்போது கருத்து தெரிவிக்க முடியாது.

காங்கிரஸ்
சட்டசபை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். அந்த மனுக்களை பரிசீலித்து இன்னும் 2 அல்லது 3 நாட்களில் நேர்காணல் நடத்த உள்ளோம். விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications