உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு பாஜவுடன் கலந்து விடும் தேமுதிக.. பார்த்திபன் பரபர தகவல்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: உள்ளாட்சித் தேர்தல் வரைதான் தேமுதிக இருக்கும். அதன் பின்னர் கட்சியை கலைத்து விட்டு பாஜகவுடன் போய் சேரத் திட்டமிட்டுள்ளார் விஜயகாந்த் என்று கூறியுள்ளார் தேமுதிகவிலிருந்து விலகி மக்கள் தேமுதிக என்று தனிக் கட்சி கண்டு தற்போது திமுகவில் இணைந்து விட்ட மேட்டூர் தொகுதி முன்னாள் சட்டசபை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன்.

வி.சி.சந்திரசேகர், சி.எம்.சேகர் ஆகியோருடன் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தேமுதிகவை விட்டு விலகி வந்தவர் பார்த்திபன். இந்த மூன்று பேருக்கும் திமுக கடந்த முறை அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளையே ஒதுக்கியது. ஆனால் மூன்று பேரும் தோற்றுப் போனார்கள். இந்த நிலையில் தேர்தல் முடிந்து போன நிலையில் சமீபத்தில் இவர்கள் மூவரும், மேலும் பல நிர்வாகிகளும் முறைப்படி தங்களைத் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

Vijayakanth will merge DMDK with BJP after local body elections, says S R Parthiban

தற்போது திமுகவில் மக்கள் தேமுதிகவை இணைக்கும் அதிகாரப்பூர்வ விழா நடைபெறவுள்ளது. இந்த விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சேலத்தில் நடந்தது. அதில் சந்திரகுமார், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேமுதிகவை வழிநடத்தும் ஆற்றலும், திறமையும் விஜயகாந்திடம் இல்லை. எனவே, உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தேமுதிகவை பாஜகவுடன் இணைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது என்றார்.

ஏற்கனவே நீண்ட காலத்திற்கு முன்பே இதே டீலுடன் பாஜக, விஜயகாந்த்தை அணுகியது. கேப்டன் டிவியையும், கட்சியையும் இணைத்து விடுங்கள், மாநில பாஜக தலைவராக உங்களை நியமிக்கிறோம். உங்களையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலைச் சந்திக்கலாம் என்று பாஜக ஆபர் கொடுத்திருந்தது. ஆனால் அதை விஜயகாந்த் நிராகரித்து விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பாஜகவுடன் தேமுதிகவை விஜயகாந்த் இணைக்கப் போவதாக பார்த்திபன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படித்தான் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி தனிக் கட்சி ஆரம்பித்தார். பயங்கர பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் போண்டியாகாமல் போனதால் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸுடன் இணைந்து விட்டார். இப்போது நிம்மதியாக வலம் வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+