மன உறுதியுடன் தேர்வை எழுதுங்கள்... 10, +2 சிபிஎஸ்இ மாணவர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து
சென்னை: தமிழகத்தில் இன்று சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மற்றும் சி.பி.எஸ்.இ படிக்கும் மாணவ, மாணவிகளான தங்களுக்கு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சிறந்த முறையிலும் தேர்வு எழுதி வெற்றிபெற்று மாபெரும் சாதனை புரிய வேண்டுமென தேர்வு எழுதச் செல்லும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

2016 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய உள்ளது. அதைப்போல தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் வாழ்வில் இந்த தேர்வு நல்ல திருப்பு முனையை ஏற்படுத்தி, அவர்கள் வாழ்கையின் வெற்றிப் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான தருணம் இந்த தேர்வுகாலம் என்பதால், தாங்கள் அனைவரும் பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படியும் மாணவ, மாணவிகள் தேர்வுக்காக தயார் நிலையில் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எனவே மாணவ, மாணவிகள் மனஉறுதியுடனும், மிகுந்த கவனத்துடனும் தேர்வுகளை சிறந்த முறையில் எழுத வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
தவெக தலைவர் விஜய் விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார்.. மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்!












Click it and Unblock the Notifications