க்ளைமேட் மாறுதே.. திமுகவுடன் "அவர்" கூட்டணி?.. அப்ப பாஜக? அதைவிடுங்க.. விஜயகாந்த் வர்றாராமே.. ஹேப்பி
சென்னை: எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. ஆனால், தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்று இப்போது வரை சஸ்பென்ஸாகவே உள்ளது.. இந்த நேரத்தில் அக்கட்சியின் பிரேமலதா தந்துள்ள ஒரு பேட்டியானது, அதற்கு மேல், ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் எகிற வைத்து வருகிறது.
2 நாட்களுக்கு முன்பு, தேமுதிக கொள்கை விளக்க பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது, திமுகவை கடுமையாக சாடினார்.
அப்போது அவர் பேசும்போது, "மரக்காணம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியது, திமுக அரசின் தவறை மறைக்கும் செயல். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

கடந்த ஆட்சியில் குடிப் பழக்கத்தால் கணவரை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கனிமொழி சொல்லியிருந்தார்.. ஆனால் திமுக ஆட்சியில்தான் தமிழகத்தில் இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சூதாட்ட தடை சட்டம் கொண்டு வந்ததுபோல், மது, கஞ்சா உள்ளிட்டவற்றை உடனடியாக ஒழிக்க வேண்டியது திமுக அரசின் வேலை" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
பிரேமலதா பேட்டி: இந்நிலையில், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கோயிலுக்கு இன்று பிரேமலதாவும், அவரது மகன் சண்முக பாண்டியனும் வந்திருந்தனர்.. இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.. முன்னதாக இவர்கள் 2 பேருக்கும் தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. பின்னர், சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கினார் பிரேமலதா.. இதற்கு பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார்..
அப்போது, "ஆட்சிக்கு வந்து 2 வருடத்தில் கருப்பு பணத்தை ஒழிக்க போவதாக சொல்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதும், இப்போது 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுகிறோம் என அறிவித்திருப்பதாலும் எந்தப் பயனும் இல்லை. இது கண்துடைப்பு நாடகம். கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்தது. இப்போது, காங்கிரசிற்கு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி அதிகமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. கேப்டனும் நானும் அந்த ஆட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
கள்ளச்சாராயம்: காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். என்ன நிலைபாடு என்பதை உரிய நேரத்தில் செய்தியாளர்களிடம் சொல்வோம்.. இந்த கள்ளச்சாராயம் விவகாரத்தில், நேரடியாகவே சென்று, அனைத்து நோயாளிகளையும் சந்தித்தேன்... விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பெரிய கொடுமையான விஷயம் நடந்திருக்கிறது.. இது கண்டிக்கத்தக்கது" என்றார்..
பிறகு, விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு பிரேமலதா, கேப்டன் நல்லா இருக்கிறார். எப்போது வர வேண்டுமோ, அப்போது வருவார்" என்று பதிலளித்தார் பிரேமலதா. எனினும், இந்த பேட்டி கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.
விஜயகாந்த்: காரணம், தேமுதிகவை பொறுத்தவரை, இதுவரை பாஜகவை வெளிப்படையாக விமர்சித்தது இல்லை.. பெரிதாக கண்டித்ததும் இல்லை.. தேமுதிக மீது பாஜக மேலிடத்துக்கு ஒருவித சாப்ட் கார்னர் இருந்து வருவதாகவே கூறப்படுகிறது.. அதிலும் விஜயகாந்த் என்றால், பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ரொம்ப பிடிக்குமாம்.. எனினும், கடந்த முறை, கூட்டணி விஷயத்தில், பாஜக மேலிடம் தேமுதிகவை கைவிட்டு விட்டதாகவே சொன்னார்கள்..
அந்த சமயத்தில் தமிழக பாஜகவிடமே எடப்பாடி பழனிசாமி, கெடுபிடி காட்டியபடி இருந்தால், தங்களுக்கு தேவையான சீட்டுக்களைகூட பாஜகவால் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.. அமமுகவை கூட்டணிக்குள் சேர்த்து கொள்ள வேண்டும் என்று சொன்னதுபோலவே, தேமுதிகவையும் இணைத்து கொள்ள பாஜக சொன்னதாம்.. ஆனால், அதிமுக மேலிடம் அதை கேட்காமல், தேமுதிகவை கமடசி நேரத்தில் கழட்டிவிட்டதாக செய்திகள் கசிந்தன. இதற்கு பிறகுதான், அமமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கவும் நேர்ந்தது..

மாறுதே கணக்கு: இதெல்லாம் பழைய கதை என்றாலும், பாஜகவுடனான பற்று தேமுதிகவுக்கு எப்போது இருக்கிறது என்றே நம்பப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது திடீரென பாஜகவின் செயல்பாட்டை தேமுதிக விமர்சித்துள்ளது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது. மேலும், ஒருபடிமேலே போய், காங்கிரசுக்கு வாழ்த்து சொல்லியுள்ளது, அதைவிட முக்கியமாக உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. அப்படியானால், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுடன் தேமுதிகயும் கூட்டணி வைக்குமா? என்று சிலர் கேள்விகளை இணையத்தில் கிளப்பி உள்ளனர்.
"மத்திய அரசின் 2000 ரூபாய் விவகாரம் அனைவருக்குமே அதிர்ச்சியான விஷயம் என்பதால், பிரேமலதா வெளிப்படையாக தன் கருத்தை சொன்னார்.. அதேபோல, ஒரு கட்சி வெற்றி பெற்றால், அதற்கு வாழ்த்து சொல்வது, இயல்பான விஷயம்தான்.. அரசியல் நாகரீகமும்கூட.. இதைதான் பிரேமலதா சொல்கிறார்.. அதற்காக கூட்டணி என்றெல்லாம் கிளப்பி விடக்கூடாது" என்று, நிலவிவரும் யூகங்களுக்கு பதிலடிகள் இணையத்தில் குவிந்து வருகின்றன.
எப்படியோ, விஜயகாந்த் சீக்கிரமாக வரப்போறாராம்.. பிரேமலதா சொன்ன இந்த மகிழ்ச்சி தகவலை கேட்டு, தேமுதிக தொண்டர்களும், நிர்வாகிகளும், ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் கேப்டனை மீண்டும் காண அதீத ஆர்வத்துடன்...!!












Click it and Unblock the Notifications