தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மரியாதை தராத விஜயேந்திரர்... தமிழ் ஆர்வலர்கள் கொந்தளிப்பு #TamilInsulted
விழா மேடையில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையில் நூல் அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜயேந்திரருக்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூலை வெளியிட்டார். விழாவின் போது தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.
இதில் பங்கேற்ற காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி மட்டும் எழுந்து நிற்காமல் தனது இருக்கையில் உட்கார்ந்திருந்தார். விழா முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார்.
|
விஜயேந்திரர்
விஜயேந்திரரின் செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. தமிழ்தாய் வாழ்த்து என்ன அவ்வளவு அவமானமானதா என அங்கிருந்த தமிழ் ஆர்வலர்கள் கொந்தளித்தனர். தமிழை அவமரியாதை செய்த விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
|
தமிழ்மொழி பெரியது
விஜயேந்திரரின் இந்த செயல் குறித்து #TamilInsulted என்ற ஹேஸ்டேக் போட்டு ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சமஸ்கிருதம் உங்களுக்கு தேவ மொழி என்றால் தமிழ் எங்களுக்கு தாய் மொழி தெய்வத்தை விட இங்கு தாய் பெரியவள் ; தாயை போன்று எங்கள் மொழியும் வணங்கப்படவேண்டியதுதான் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.
|
விஜயேந்திரருக்கு கண்டனம்
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த செயல் கடும் கண்டனத்திற்குறியது என்று பதிவிட்டுள்ளார் ஒருவர். விஜயேந்திரரின் செயல் குறித்து அங்கிருந்த எச். ராஜாவிடம் கருத்து கேட்ட போது அவர் கருத்து கூறாமல் சென்றுவிட்டாராம்.
|
தமிழுக்கு மரியாதை இல்லையா
மேடையில் இன்னொரு மேடை!!! பிரிவினையின் உச்சம் ! இந்த மாதிரி ஆட்களையும் நம்பி ஒரு கூட்டம். வெட்கக்கேடு #TamilThaiVazhatu என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். தமிழுக்கு அவமரியாதை செய்வதா என்றும் கேட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications