போர்சே கார் விபத்து: போதையில் கார் ஓட்டிய விகாஷ் ஆனந்துக்கு இடைக்கால ஜாமீன்
சென்னை: குடிபோதையில் போர்சே காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி ஆட்டோ டிரைவரின் உயிரைப் பறித்த கார் ரேஸ் வீரர் விகாஷ் ஆனந்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த மாதம் 19 ஆம் தேதி அதிகாலையில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அதிவேகமாக வந்த போர்சே கார் ஒன்று சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. இந்தக் கோர விபத்தில் ஆட்டோக்களுக்குள் உறங்கிக் கொண்டிருந்த டிரைவர்களும் படுகாயமடைந்தனர். டிரைவர் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 11பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த விகாஷ் மற்றும் அவரது நண்பர் சரண் இருவரும் குடிபோதையில் தாறுமாறாக போர்சே காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் விகாஷ் என்பவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவரின் மகன் என்றும் அவர் தான் காரை ஓட்டிச்சென்றார் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து குடிபோதையில் வாகனம் ஒட்டி விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட விகாஷ் ஆனந்த் சிறையில் அடைக்கப்பட்டுயிருந்தார். இதனிடையே ஜாமீன் கோரி விகாஷ் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்
சட்ட படிப்பிற்கான தேர்வு எழுத இருப்பதால் இடைக்காலமாக வரும் 20-ம் தேதி வரை விகாஷ் ஆனந்த்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மீண்டும் 21 ம் தேதி சைதாப்பேட்டை 18 வது குற்றவியல் நீதிமன்றத்தில் விகாஷ் ஆஜராக உத்தரவு பிறபிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications