அதிமுக, திமுகவுக்கு மாற்று இல்லை... இது விகடன் கருத்துக் கணிப்பு சொல்லும் சேதி!
சென்னை: கருத்துக் கணிப்புகளுக்கு நாளையோடு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், கடைசி நேரக் கணிப்பாக வந்திருக்கிறது விகடன் கருத்துக் கணிப்பு.
இந்தக் கணிப்பு முடிவுகள் யாருக்கும் சாதகமானதாக இல்லை. என்றாலும், திமுக - காங்கிரஸ் கூட்டணி சற்றே முன்னோக்கி நிற்கிறது. ஆனால் அதைத் தாண்டி அதிமுக வென்றாலும் ஆச்சர்யப்பட வேண்டாம் என்பதைச் சொல்கிறது விகடன் கணிப்பு.

ஒரு விதத்தில் இது ரொம்ப பாதுகாப்பான கணிப்பு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 83 தொகுதிகள் இழுபறி... அதாவது அதிமுக (73), திமுக (74) கூட்டணிகள் தனித்தனியாக வெல்லும் சூழலுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை விட இந்த இழுபறி தொகுதிகளின் எண்ணிக்கை அதிகம்!
கடைசி நேரத்து மனமாற்றங்களால் ஓரிரு சதவீத வாக்குகள் மாறினாலே போதும், இந்த இழுபறி யாராவது ஒருவருக்கு சாதகமாகிவிடும்.
இன்னொன்று இந்த இழுபறித் தொகுதிகளுக்குக் காரணம் மக்கள் நலக் கூட்டணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி என்று குறிப்பிட்டுள்ளது விகடன். இந்த இரு கட்சிகளும் கூட்டணிகளில் சங்கமித்திருந்தால் தெளிவான கருத்துக் கணிப்பு முடிவுகள் கிடைத்திருக்கலாம்.

விகடன் கணிப்பு சொல்லும் முக்கிய உண்மை... கடந்த 45 ஆண்டுகளாக தமிழகத்தை மாற்றி மாற்றி ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவுக்கு இன்னும் கூட மாற்று இல்லை என்பதுதான்.
"கடந்த 45 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திராவிடக் கட்சிகள் இரண்டையும் வீழ்த்துவதற்கு தனித்தனியாக கூட்டணிகள் அமைத்து பல கட்சிகளும் களம் கண்டு வருகிறார்கள். ஆனாலும் இந்த திராவிடக் கட்சிகள் இரண்டின் செல்வாக்கும் அப்படியே தொடருவதைத்தான் இந்தக் கருத்துக்கணிப்பும் காட்டுகிறது. கடுமையான மோதல் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்குள் மட்டுமே உள்ளது," என்கிறது விகடன்.
அப்படியெனில் மாற்று அரசியலை முன்னெடுத்த மக்கள் நலக் கூட்டணி, பாமக, நாம் தமிழர் கட்சி போன்றவற்றுக்கு இன்னும் மக்களிடம் நம்பகத்தன்மை கிடைக்கவில்லையா?
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications