'நாளைய தமிழகமே'.. போஸ்டரால் திமுகவில் பரபரப்பு!
சென்னை: 'நாளைய தமிழகமே' என போஸ்டர் அடித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர ராஜா.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தின் போது வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கத்தில் இருந்து வெளியேறி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை தொடங்கியவர் விக்கிரமராஜா. இதனாலேயே இவர் திமுக அனுதாபியாக பார்க்கப்பட்டார்.
விக்கிரமராஜாவின் மகன் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, திமுக தென் சென்னை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர்தான் இப்போது திமுக தலைமையின் கோபத்துக்குள்ளாகி இருக்கிறார். அப்படி என்ன செய்துவிட்டார் பிரபாகர ராஜா என்கிறீர்களா?

இதுதான் ஃபேஸ்புக் பதிவு
பிரபாகர ராஜாவின் பிறந்த நாள் இன்று.. இதையொட்டி தமது ஃபேஸ்புக் பக்க்த்தில், தன்னுடைய பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்று ஒரு பதிவை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். (இந்த போஸ்டை ராஜா பின்னர் நீக்கிவிட்டார்)

அதகள போஸ்டர்
இந் நிலையில் நேற்று முதல் சென்னையின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் இவை:" தளபதியின் நம்பிக்கையே! நாளைய தமிழகமே! நாடார்குல மாணிக்கமே! வணிகர்களின் இளைய பாதுகாவலரே! எங்கள் தென்பாண்டி சிங்கம். இந்த போஸ்டர்கள் சென்னை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருக்கிறது.

அப்ப ஸ்டாலின்?
இந்த போஸ்டர்தான் இப்போது திமுக மூத்த தலைவர்களை கடுப்பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ட்விட்டர் பக்கத்தில் தமிழ் தாத்தா என்ற பெயரிலான பதிவர், இந்த போஸ்டர் படங்களைப் போட்டு 'நாளைய தமிழகம் இவரென்றால் அப்போது தளபதி @mkstalin யார்?? என்று கேட்டிருக்கிறார்.

யாருடைய ஆதரவு?
இந்த விவகாரம் சில மூத்த தலைவர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. பல முன்னணித் தலைவர்களும் திமுக தலைமையிடம் இந்த விவகாரத்தை நேரில் கொண்டு சென்று விவாதித்து வருகின்றனர்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications