விளம்பி தமிழ் புத்தாண்டு கனிகாணுதலுடன் உற்சாகமாக பிறந்தது - கோவில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வீட்டில் கனி காணுதலோடு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: உலகம் முழுவதும் வாழும் தமிழக மக்கள் தமிழ் புத்தாண்டினை இன்று உற்சாகமாக கொண்டாடினர்.விளம்பி தமிழ் புத்தாண்டு இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு ஏராளமானோர் வீடுகளில் கனிகளை அலங்கரி த்து சாமி கும்பிட்டனர். கோவில்களில் இறைவனை வழிபட்டு புத்தாண்டினை மகிழ்ச்சிகரமாக தொடங்கினர்.
ஒரு வருடத்தின் தொடக்கம் என்பது மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். தொடக்கம் சரியாக இருந்தால் அந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பது நம்பிக்கை.
சித்திரை முதல் நாளான தமிழ் வருடப்பிறப்பும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வீட்டில் கனி காணுதலோடு புத்தாண்டை தொடங்குகின்றனர்.
வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள், மாதுளை இப்படி பலவகை பழங்களை ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து மையப்பகுதியில் புதிய ரூபாய் நோட்டுக்களை வைத்து, அதன் மேல் தங்க, வெள்ளி நகைகளை வைத்து அலங்கரித்திருந்தனர்.

பணம், பழங்கள்
தமிழ் புத்தாண்டுக்கு முதல்நாள் இரவு பூஜை அறையில் ஒரு கண்ணாடியை வைத்து அதன் முன்பாக இந்த பழத்தட்டினை வைத்து அலங்கரித்து விடிந்த உடன் குழந்தைகளின் கண்களை மூடி அழைத்து சென்ற அம்மா அந்த பழத்தட்டிலும், கண்ணாடியிலும் விழிக்க வைப்பது வழக்கம். இப்படி மங்கல பொருட்களைப் பார்ப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

கோவில்களில் வழிபாடு
தமிழ்நாட்டில் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த கனி காணுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், திருப்பூர், கோவையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் கனி காணுதல் நடைபெற்றது. அதிகாலை முதலே கோவில்களில் ஏராளமானோர் இறைவனை வழிபட்டு புத்தாண்டினை உற்சாகமாக தொடங்கினர்.

புத்தாண்டு உற்சாகம்
தமிழ் புத்தாண்டு தினமான இன்று கோவில்களிலும் வீடுகளிலும் பூஜை அறையில் வைத்த பணத்தை பலருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். கை நீட்டம் என்று கூறப்படும் இந்த பழக்கம் மலையாள மக்களிடம் இருந்து வந்ததுதான் என்றாலும் அன்றைய தினம் கனி காணுதலையும், கை நீட்டம் நிகழ்ச்சியையும் பார்க்கும் போது தமிழ் புத்தாண்டு தினம் உற்சாகத்தைத்தான் தருகிறது.

பக்தியுடன் கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் வடபழனி முருகன் கோவில், கபாலிஸ்வரர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்,மாங்காடு காமாட்சியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கீழப்பாவூர் ஸ்ரீ ருக்குமணிசத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் சித்திரைவிசுவை முன்னிட்டு கனி காணுதல் வைபவம் நடைபெற்றது. காசுகளை கை நீட்டமாக குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பெரியோர்களும் வழங்கினர்.

திருவண்ணாமலையில் பஞ்சாங்கம் வாசித்தல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அண்ணாமலையார் கோயில் வழக்கப்படி, பால் பெருக்கு நிகழ்ச்சியும், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் புத்தாண்டுக்கான (விளம்பி) பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications