For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் விழாவில் சலசலப்பு... முழக்கமிட்ட கிராம உதவியாளர்களால் பரபரப்பு

சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் பழனிசாமி விழாவில் வருவாய் கிராம உதவியாளர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காலமுறை ஊதிய உயர்வு தொடர்பாக முதல்வர் அறிவிப்பு வெளியிடாததால் உதவியாளர்கள் முழுக்கமிட்டனர். விழா முடிந்து முதல்வர் புறப்படும் போது கிராம உதவியாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் வருவாய்துறை சார்பில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சிலர் திடீர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Village assistants stage protest in CM function

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவாய் துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். விழாவில் பேசிய அவர், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்குபவர்கள் கிராம நிர்வாக அலுவர்கள் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது 12,616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசு அமைப்பில் எண்ணற்ற அதிகாரங்களை கொண்டவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் என்றும் பழனிசாமி பேசினார்.

விழா முடிந்து முதல்வர் கிளம்பி செல்லும் நேரத்தில் கிராம உதவியாளர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர்.
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் அலுவலர்களை சமாதானம் செய்தனர்.

English summary
The Chief Minister felicitated by the village assistants in the ceremony. The village assistants were enlisted by the Chief Minister's announcement about the periodic salary increases. When the Chief Minister left the ceremony, the sound was scattered due to the call of the village assistants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X