அடுத்தடுத்து 8 பேர் மரணம் – ஊரைவிட்டு வெளியேறி தோப்பில் குடியேறிய மக்கள்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகி அருகே அடுத்தடுத்து 8 பேர் தொடர்ச்சியாக மரணமடைந்த காரணத்தினால் ஒட்டுமொத்த கிராம மக்கள் ஊரை காலி செய்துவிட்டு தோப்பில் குடியேறிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கூலியம் ஊராட்சிக்குட்பட்ட அம்மனேரி கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் மழை வேண்டியும், பேய், பிசாசு தங்களை நெருங்கி விடக்கூடாது என்பதற்காக ஊரை காலி செய்து, அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து, மாரியம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களில் 8 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். தெய்வ குற்றம் காரணமாக இது போல நடப்பதாகவும், அம்மனை வழிபட்டால் அனைவரும் நலமாக இருக்கலாம் என்றும் ஊர் பெரியவர்கள் கூறியிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஊரை காலி செய்து விட்டு வெளியேறினார்கள். அவர்கள் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள தென்னந்தோப்பில் குடியேறினார்கள்.
இதற்காக பொதுமக்கள் தாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடுகள், கோழிகள், நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளையும் அழைத்து சென்றனர். இதனால் அந்த கிராமத்தில் வீதிகள் வெறிச்சோடி கிடந்தன.
தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் மாரியம்மனுக்கு வழிபாடு நடத்த ஊருக்குள் திரும்பினர். முன்னதாக ஊர் மக்கள் அனைவரும் வெளியே சென்றதால், யாரும் ஊருக்குள் வராத வகையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த 15 பேர் ஊர் எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications