கோயில் கும்பாபிஷேகம் செய்ய அனுமதி கேட்டு, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊர் மக்கள்
நெல்லை: சங்கரன்கோவில் அருகே கோயில் கும்பாபிஷேகம் நடத்தாமல் மாவட்ட நிர்வாகம் தூங்கி வருவதால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் உடையார் தலைமையில் உடம்பன்குளம் கிராம மக்கள் வேன்களில் திரண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில் "சங்கரன்கோவில் அடுத்துள்ள உடும்பன்குளம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைத்து சமுதாய மக்களும் இங்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து கோபாலகிருஷ்ணன் சாமி கோவிலை நிறுவினர். கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் புறம்போக்கு நிலத்தில் கோயில் அமைந்துள்ளதாக கூறி சிலர் கும்பாபிஷேகம் நடத்த விடாமல் தடுத்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த காரணத்தால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு கோயில் கும்பாபிஷேகம் நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிடாமல் அமைதியாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு கும்பாபிஷேகம் நடக்க உதவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முற்றுகையால் கலெக்டர் அலுவலகத்தில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பாக இருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications