காட்டு பன்றியை சமைத்து சாப்பிட்ட கும்பல்- வனத்துறையினர் வந்ததால் தப்பி ஓட்டம்
நெல்லை: நெல்லை அருகே காட்டு பன்றியை வேட்டையாடிய கும்பல் அதை சமைத்து சாப்பிட்ட போது வனத்துறையினர் வந்ததால் சாப்பாட்டை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தது.
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் புலிகள், சிறுத்தை கடமான், யானை, கரடி, செந்நாய் உள்ளிட்ட பல வன விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடுமையான குளி்ர் நிலவி வருவதால் வன விலங்குகள் மலை அடிவாரத்தில் முகாமிட்டுள்ளன.
இவை ஊருக்குள் புகுந்து வாழை, நெற்பயிர்களை சேதப்படுத்துவதுடன் பனை, தென்னை, முந்திரி மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்கின்றன. சிதம்பரபுரம், திருக்குறுக்குடி பகுதியில் மூன்று விவசாயிகளை காட்டு பன்றிகள் தாக்கின.
இதில் ஊருக்குள் புகும் கடமான்களை சிலர் வேட்டையாடுவதாக புகார் தெரிவிக்கின்றனர் கிராம மக்கள். இதை உறுதி படுத்தும் வகையில் திருக்குறுங்குடி காட்டு பகுதியில் பன்றியை வேட்டையாடிய கும்பல் வனத்துறையினர் வந்ததை பார்த்ததும் ஓட்டம் பிடித்தது தெரிய வந்துள்ளது.
திருகுறுங்குடி அருகேயுள்ள லெவஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவரது வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் காட்டு பன்றியை வேட்டையாடி துண்டு துண்டாக வெட்டி கறி சமைத்துள்ளனர்.

இதுகுறித்து திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வன சரகர் நடராஜன், வனவர் அப்துல் ரகுமான் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்றனர். வனத்துறையினரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓடியது.
வனத்துறையினர் சாமுவேல் வீட்டில் சோதனை நடத்தியதில் அங்கு சமைக்க தயார் நிலையில் இருந்த பன்றி இறைச்சியை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதில் ஈடுபட்ட கும்பலை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications