குடிநீர் பாட்டிலை கண்டு பதறிய போலீசார்.. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
குடிநீர் பாட்டிலை கண்டு போலீசார் சற்று பீதியடடைந்தனர்.
ஈரோடு: சில நேரங்களில் நம்ம போலீசார் அளவுக்கு அதிகமாகவே யோசித்து உணர்ச்சிவசப்பட்டு விடுகின்றனர். ஈரோட்டில்கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடைபெற்றது.
இங்கு வெட்டு காட்டு வலசு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் வரும் தண்ணீர் சுத்தமாக இருப்பதில்லையாம். மாசு கலந்து வருவதால் குடிக்க முடியாமல் இப்பகுதி மக்கள் ரொம்பவே அவதிப்பட்டு வந்தனர்.

அரிப்பு நோய்கள்
இதுபோல அசுத்தமான தண்ணீர் வருவதற்கு காரணம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் சாயப்பட்டறைகள் என்று அவர்கள் கூறுகின்றனர். அந்த பட்டறைகளிலிருந்து யாருக்கும் தெரியாமல் சாயக்கழிவு நீரை போர்வெல் மூலமாக நிலத்தில் கலந்துவிடுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்த சாய நீர் குடிநீருடன் கலந்து அதை தாங்கள் குடிக்கும்போது, அரிப்பு உள்ளிட்ட ஏராளமான நோய்கள் ஏற்படுவதாகவும் மக்கள் புலம்பி தீர்க்கின்றனர்.

சாயக்கழிவு தண்ணீர்
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் நிறைய முறை புகார் அளித்து பார்த்தாச்சு.. ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் கலெக்டரிடம் புகார் அளித்து மனு கொடுக்கலாம் என ஆட்சியர் அலுவலகத்துக்கு மக்கள் திரண்டு வந்தனர். கலெக்டரிடம் புகார் சொன்னாலும் அதை அவர் நம்ப வேண்டுமே என்பதற்காக, பொதுமக்கள் வரும்போதே அந்த சாயக்கழிவு கலந்த தண்ணீரை பாட்டில்களில் நிரப்பி எடுத்து வந்தனர்.

பாட்டிலில் என்ன?
ஆட்சியர் அலுவலகத்தில் அனைவரும் பாட்டிலும் கையுமாக உள்ளே நுழைந்ததை அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் பதறிப்போய்விட்டனர். உடனடியாக விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். பாட்டிலில் என்ன? என்றனர். அதற்கு பொதுமக்கள், எங்கள் பகுதி சாயநீர் என்றனர். ஆனால் போலீசாரோ அதனை நம்ப மறுத்தனர்.

பரிசோதனை
கையில் உள்ள சாயநீரை பெட்ரோல் என நினைத்துவிட்டு அனைத்து பாட்டில்களையும் வேகவேகமாக வாங்கி கொண்டனர். மக்கள் எவ்வளவோ சொல்லியும் அதை போலீசார் நம்பவே இல்லை. அந்த நீரை எடுத்து பரிசோதித்து பார்த்தபின்னர்தான் தண்ணீர் என தெரிந்தது. அதன்பிறகுதான் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்லவே அனுமதிக்கப்பட்டனர். பார்ப்பதற்கு பெட்ரோல் போலவே இருக்கும் குடிநீரை பயன்படுத்தும் கிராம மக்களின் நிலை உண்மையிலேயே பரிதாபம்தான்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications