தண்டவாளத்தில் நின்ற லாரி.. குடங்களைக் காட்டி ரயிலை நிறுத்திய புத்திசாலிப் பொதுமக்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ரயில் தண்டவாளத்தில் சிக்கி நின்ற லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயிலை, பொதுமக்கள் காலிக் குடங்களைத் தூக்கிக் காட்டி நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்செந்தூர் சாலையில் உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் கீழ்பகுதியில் குடியிருப்புகளும் உப்பளங்களும் உள்ளன.

இதில் நேற்று பிற்பகல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிகொண்டு சரக்கு ரயில் தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்கு சென்றது, அப்போது தூத்துக்குடி பெரியசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள உப்பளங்களில் இருந்து உப்பு பண்டல்கள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிகொண்டு அப்பகுதியில் அமைந்துள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது லாரியின் பின்சக்கர அச்சு முறிந்து ரயில்வே தண்டவாளத்தின் மீது லாரி நின்றுவிட்டது.
இதனை கண்ட பெரியசாமிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களிடம் இருந்த காலி குடங்களை எடுத்து வந்து, அந்த வழியாக வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலை நோக்கி காட்டினர். இதைப் பார்த்த சரக்கு ரயிலின் என்ஜின் டிரைவர் ரயிலை முன்கூட்டியே நிறுத்தி விட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அதன் பி்ன்னர் கிரேன் கொண்டு வரப்பட்டு லாரி இழுத்து செல்லப்பட்டது. இதனால் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக சரக்கு ரயில் சென்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications