சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்.. பலத்த போலீஸ் குவிப்பு

5 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.

கடந்த 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடும் செய்யப்பட்டது.

இன்றும் நாளையும்

இன்றும் நாளையும்

நகரம் முழுவதும் ஆயிரத்து 520 விநாயகர் சிலைகள் வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கினர். அவைகள் இன்றும் நாளையும் கடலில் கரைக்கப்பட உள்ளன.

விதிமுறைகள்

விதிமுறைகள்

விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழியிலேயே செல்ல வேண்டும், அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் இந்த ஊர்வலம் நடைபெற வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிமுறைகளை போலீசார் பிறப்பித்திருக்கிறார்கள்.

5 இடங்களில் கரைப்பு

5 இடங்களில் கரைப்பு

எனவே இன்று, இந்து முன்னணி, சிவசேனா, அகில இந்திய இந்து சத்திய சேனா உள்பட இந்து அமைப்புகள் இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலகமாக கொண்டு செல்லப்பட உள்ளன. இதில் சென்னையில் மட்டும் படினப்பாக்கம் ஸ்ரீசிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய 5 பகுதிகளில் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிரடிப்படை

அதிரடிப்படை

இந்த விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியான முறையில் நடக்க 20 ஆயிரம் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் அதிரடி படை போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+