சென்னை கடலோரங்களில் அணிவகுத்த விநாயகர் சிலைகள்... 2வது நாளாக கரைப்பு
சென்னை: இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று 2வது நாளாக கரைக்கப்பட்டு வருகின்றன.
சிலைகள் கரைப்பையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிறிய விநாயகர்கள் முதல் பெரிய அளவிலான விநாயகர் வரை பல்வேறு விதமான சிலைகள் கடலோரங்களில் கரைப்புக்கு குவிந்து வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி
ஆகஸ்ட் 29ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான சிலைகள் மாநிலம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. சென்னையில் 1900 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

2 நாட்களாக கரைப்பு
இந்த சிலைகளை நேற்று முதல் கரைத்து வருகின்றனர். பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் இவை.

சிறப்பு ஏற்பாடுகள்
பல்வேறு இந்து அமைப்பினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப்பட்டன. இதற்காக, பட்டினப்பாக்கம், காசிமேடு, பாலவாக்கம், எண்ணூர் கடற்கரைகளில் சிலைகளை கரைப்பதற்கு வசதியாக ராட்சத கிரேன்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த கடற்கரை பகுதிகளில் போலீசார் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து முழு அளவில் பாதுகாப்பு அளித்தனர். ஆனாலும், நேற்று எதிர்பார்த்த அளவில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படவில்லை. காரணம், பல்வேறு இந்து அமைப்புகள், இன்று இந்து முன்னணி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்து விட்டன.

இந்த முன்னணி சிலைகள் இன்று
இன்று முக்கிய அமைப்பான இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன.

நேற்று கொஞ்சம் சிலைகள்தான்
நேற்று பெரும்பாலான விநாயகர் சிலைகள் கரைக்கப்படவில்லை. இதனால் பட்டினப்பாக்கம், பாலவாக்கம், காசிமேடு ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 155 சிலைகள் மட்டுமே கரைக்கப்பட்டன.

இன்று குவிந்த விநாயகர்கள்
ஆனால் இன்று கடற்கரைகளில் பெருமளவில் விநாயகர் சிலைகள் குவிந்து விட்டன. காலை முதலே அவை கரைக்கப்பட்டு வருகின்றன.

கூட்டம் குவிந்தது
சிலைகள் கரைக்கப்படுவதைப் பார்க்க மக்கள் கூட்டமும் அலை மோதுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டமும் அதிகமாகவே உள்ளது. இதனால் போலீஸார் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications